தேச ஒற்றுமையை பேணிக்காப்பது
cri
 திபெத் பண்டைகாலந் தொட்டே சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக திகழ்கின்றது. திபெத்தின் மதத் தலைவர்கள் நாட்டுபற்று கலந்த, மத பற்றை வெளிப்படுத்தி தாய்நாட்டின் ஒன்றிணைப்பையும் தேச ஒற்றுமையையும் உறுதியாக பாதுகாக்க வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியாங்சின்லிங் கூறியுள்ளார். இன்று மத்திய அரசின் பிரதிநிதிக் குழுக்குக்கு தலைமை ஏற்று லாசா நகரின் மையத்திலுள்ள தாச்சோ கோயிலில் 100க்கும் மேலான மதத் தலைவர்களையும் புத்தர்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.
 இன்று திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவுக்கான ஊழியர் கூட்டம் திபெத் மக்கள் மகாமண்டபத்தில் நடைபெற்றது.
|
|