பிரதேத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவு நாளான இன்று திபெத் தலைநகரான லாசாவிலுள்ள புத்தலா மாளிகையின் சதுக்கத்தில் பல்வேறு தேசிய இனங்களின் 20 ஆயிரம் மக்கள் திரண்டு பிரமாண்டமான கொண்டாட்டத்தை நடத்தினர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியாசிங்லின் மத்திய அரசு பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை ஏற்று கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வாழ்த்து செய்தி அனுப்பியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கொள்கை முற்றிலும் சரியானது. சோஷலிஸ தேசிய இன பிரதேசத்தின் சுய ஆட்சி அமைப்பு முறைக்கு மாபெரும் மேம்பாடு உண்டு என்பதை கடந்த 40 ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி பிரதேசம் பெற்றுள்ள மாபெரும் சாதனைகள் போதியளவில் காட்டுகின்றன என்று வாழ்த்து செய்தி கூறுகின்றது.
மத்திய அரசின் பிரதிநிதிக் குழுத் தலைவர் சியாசிங்லிங் கூட்டத்தில் பேசியதாவது சோஷலிச மற்றும் நாட்டு பற்றுக் கொடியை திபெத் எப்போதும் உயர்வாக ஏந்தி பிடித்து அமைதியான, ஒற்றுமையான அரசியல் நிலைமையை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். தாய்நாட்டின் ஒன்றிணைப்பையும் பல்வேறு தேசிய இன குடும்பத்தின் வளர்ச்சியையும் பேணிக்காக்க வேண்டும் என்றார் அவர். கடந்த 40 ஆண்டுகளில் மக்கள் பேரவை அமைப்பு முறையின் உத்தரவாதத்துடன் திபெத் இன மக்கள் நாட்டின் மற்ற இனங்களின் மக்கள் போல் சமத்துவ நிலையில் நாட்டு விவகார நிர்வாகத்தில் பங்கெடுக்கும் உரிமையை முழுமையாக அனுபவித்துள்ளனர். தற்போது சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளில் 21 பிரதிநிதிகள் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். அவர்களில் 13 பேர் திபெத் இன குடி மக்களாவர்.
கடந்த 40 ஆண்டுகளில் மத்திய அரசு திபெதிற்கு வழங்கிய நிதி உதவி தொடர்ந்து அதிகரித்துள்ளது. 1965ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இத்தொகை 9600 கோடி யுவானை தாண்டியது. 2001ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் திபெத் பொருளாதார வளர்ச்சியின் வேகம் 12 விழுக்காட்டில் உள்ளது. 2004ம் ஆண்டில் தன்னாட்சி பிரதேசம் முழுவதின் உற்பத்தி மதிப்பு 2110 கோடி யுவானை தான்டியது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் முக்கிய பொறுப்பாளர் யான் ஸவான் தாங் கூறியதாவது கடந்த 40 ஆண்டுகளில் அரசியலும் மதமும் பின்னிப்பிணைந்த நிலப்பிரபத்துவ அடிமை முறை ஒழிக்கப்பட்டது. தற்போதைய திபெத்தில் கல்வி, சுகாதாரம், அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு ஆகிய துறைகள் விறுவிறுப்பாக வளர்ந்துள்ளன. பல்வேறு தேசிய இன மக்களின் சிந்தனை கல்வியறிவு, அறிவியல் பண்பாட்டு அறிவு, சுகாதார கல்வியறிவு ஆகியவை உயர்ந்துள்ளன. மற்ற மாநிலங்களுக்கு திறந்து வைக்கப்பட்ட மத சுதந்திரம் கலந்த புதிய திபெத் உலகின் நாகரிகம், மனித குலத்தின் முன்னேற்றம், தாய்நாட்டின் வளம் வலிமை ஆகியவற்றுடன் இணைந்து இணக்கமாக வளர்ந்து வருகின்றது என்று யாங்ஸவென்தாங் கூறினார்.
திபெத் மக்களின் பிரதிநிதி ஆணு கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் கடந்த 40 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும், அரசவையும் எங்கள் மீது அன்பு காட்டியுள்ளன. திபெத் வேளாண்மை மற்றும் மேய்ச்சல் பிரதேசங்களில் மருத்துவ காப்புறுதி உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகளின் கல்வித் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகள் எங்கள் வீட்டு வாசல் வழியாக செல்கின்றது. வானொலி, தொலைக்காட்சி, தொலை பேசி, செல்லிட பேசி, கணிணி போன்ற முன்னேறிய மின் சாதனங்கள் எங்கள் குடும்பங்களுக்கு வந்து விட்டன. ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்பட்டுள்ளது என்று கூறினார்.
தற்போது திபெத்திற்கு ரெயில்வே பாதையும், லிங்சு விமான நிலையமும் பயணிகளை வரவேற்கும். நெடுஞ்சாலை வலை தொடரமைப்பு பெரிதும் சீரடைந்துள்ளது. எரியாற்றல், தொலை தொடர்பு, நீர் சேமிப்பு திட்டம் ஆகியவை உற்பத்தியில் உதவுகின்றன.
|
|