• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-01 18:12:09    
வேளாண் துறையிலான டிஜிட்டல்

cri

வணக்கம் நேயர்களே. இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில சீன வேளாண் துறையில் டிஜிட்டல் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர்கள் ராஜாராம், தி கலையரசி

ஏ.....வேளாண் துறையில் டிஜிட்டல் அறிவியல் நுட்பம் என்பது எதைக் குறிக்கின்றது?

பி.....டிஜிட்டல் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்த சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் 863ம திட்டம், 973ம் திட்டம், முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் திட்டம் ஆகியன வழிகாகட்டியுள்ளன. இதன் அடிப்படையில் வேளாண் தகவல் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் டிஜிட்டல் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு முன் மாதிரியான மற்றும் அறிவு சார்ந்த வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். மேலும் இணையம் மூலம் வேளாண் தகவல்கள் பரப்பப்படும்.

ஏ.....டிஜிட்டல் வேளாண்மை சீனாவின் கிராமப்புறங்களில் பலவகை விவசாய வேலைகளை நடத்துவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

பி.......இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்டகாலமாக வேளாண் உற்பத்திபப் பணிகள் மனிதரின் அனுபவத்தின் அடிப்படையில் நடைபெற்று வந்தன. வேளாண் உற்பத்திச் சூழல் மக்களின் தேவைக்கு ஏற்ற படி மாற முடியாததால் விவசாய உற்பத்தி முரை முழுவதையும் சரியாகக் கண்காணித்து மிகசிறந்த ஒரு உற்பத்தி முரையை உருவாக்க வேண்டும் என்ற கனவு கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது.

ஏ.......டிஜிட்டல் முறையை பயன்படுத்தி விவசாயிகளுக்கு எந்த வகையில் நன்மை தர முடியும் ?

பி.......டிஜிட்டல் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் நேரடியாக வேளாண் நிபுணர்களுடன் தொடர்பு கொல்ளலாம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான அறிவு விதிகள் இடம் பெறும் தளம், 3 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையிலான குறிப்புக்களின் தொகுப்பு, 600க்கும் அதிகமான பிரதேச அறிவு மாதிரிகள் ஆகியவற்றை நிறுவியுள்ளனர். இந்த தகவலை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 248 கோடி கிலோகிராம் எடையுள்ள தானிய விளைச்சலை கிடைக்கும். உற்பத்திச் செலவில் 60 கோடி யுவான் குறைக்கலாம். 70 லட்சக்கும் அதிகமான விவவாயக் குடும்பங்கள் இதன் மூலம் நன்மை பெறலாம்.

ஏ........ஆகவே சீனாவில் டிஜிட்டல் வேளாண்மை என்ற

இலக்க அறிவியல் முறையின் மூலம் விவசாய நுட்பங்களை மக்கள் புரிந்து கொண்டு மக்களின் பயிர் உற்பத்தி நிர்வாகத்தில் ஆழ்ந்த சீர்திருத்தத்தை ஏற்படுத்த இது துணை புரியும்.

பி,.......நீங்கள் சரியான கருத்தை தெரிவிக்கிறீர்கள். இது மட்டுமல்ல, முன்னேறிய தகவலைப் பயன்படுத்துவதன் மூலம் மண் ரகம், உரத்தின் ஆற்றல் முதலிய தகவல், மழை பெய்தல், சூரிய ஒளி போன்ற வேளாண் துறையிலான உயிரின வாழ்க்கை தகவல் ஆகியவற்றை சேகரித்து தகவல் பகுத்து ஆராய்ந்து அமைப்பு முறையின் மூலம் அவற்றை உழவர்களுக்கு வழங்குவது உரம் வீசும் அளவு, கிருமி நாசினியை பயன்படுத்தும் அளவு, வெவ்வேறு வகை விளைநிலத்தில் பயிரிடும் நுட்பம் ஆகியவற்றை மதிப்பிட்டு விளைச்சலை நன்கு உயர்த்தி சாகுபடிச் செலவைக் குறைத்து சுற்றுசூழலின் தூய்மைகேட்டைக் குறைப்பது ஆகியவற்றில் டிஜிட்டல் வேளாண் நுட்பம் உதவியாக இருக்கும்.