இணைய தொழிலின் சீரான வளர்ச்சிக்காக, பல்வகை நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று சீன தகவல் தொழில் அமைச்சர் Wang Xu Dong கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் "2005ஆம் ஆண்டுக்கான சீன இணைய மாநாட்டின்" துவக்க விழாவில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் இணைய தொழில் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது. தற்போது, சீனா முழுவதிலும், இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியே 30 லட்சத்தை எட்டியுள்ளது. இணையப் பயன்பாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்றார். இனி, இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சீனா மேலும் வலுப்படுத்தி, இணைய தொழில் நுட்பப் பயன்பாட்டை உயர்த்தி, இதில் சர்வதேச ஒத்துழைப்பு மூலம், சீன இணைய தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று அவர் கூறினார்.
|