• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-01 12:15:30    
ஜியா சிங்லினின் உரை

cri

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவை ஒட்டி, திபெத் தலைநகர் லாசாவில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் உரையாற்றிய சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி தலைவர் ஜியா சிங்லின், சீன கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையையும் தேசிய இனப் பிரதேச தன்னாட்சி முறையையும் உறுதியாக கடைப்பிடித்தால் தான், திபெத் மக்களின் அடிப்படை நலனை செவ்வனே பேணிக்காக்க முடியும் என்று கூறினார்.

தேசிய இன ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி, தாய்நாட்டின் ஒன்றிணைப்பைப் பேணிக்காப்பது, திபெதிலுள்ள பல்வேறு இன மக்களின் அடிப்படை நலனுக்கு நல்லது என்று அவர் வலியுறுத்தினார். தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி முறையை மேலும் முழுமைப்படுத்தி, சமமான, ஒன்றுபட்ட மற்றும் இசைவான தேசிய இன உறவை வளர்க்க வேண்டும் என்றும், நாட்டின் ஒன்றிணைப்பை உண்மையாக பேணிக்காத்து, பல இனங்களை கொண்ட சீனாவின் வளர்ச்சிக்காக மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் ஜியா சிங்லின் கேட்டுக் கொண்டார்.