இப்போது, பெய்ஜிங்கில் இலையுதிர் காலம். ஆனால், தமிழ் நாடு இன்னும் கோடைகாலத்தின் பிடியில் இருந்து விடுபட வில்லை. இத்தகைய வெப்ப வானிலையில், எளிதான வறுவல் சமைக்க விரும்புகின்றனர்.
இனி, கலைமகளும் ராஜாராமும், ஒரு வகை சுவையான நூடுல்ஸ் கூறுகின்றனர்.
ராஜாராம்—சரி. சீனாவில் நூடுல்ஸ் வகைகள் மிக அதிகம் என்று தெரிகிறது. எந்த வகை நூடுல்ஸ் நீங்கள் அறிமுகப்படுத்தப் போகிறீர்கள்?
கலைமகள்—நான் தயாரிப்பது, கிலக்கும் நூடுல்ஸ். முதலில் தேவைப்படும் பொருட்களைச் சொல்வேன்.
செலரி, 60 கிராம்
வெள்ளரிக்காய், 100 கிராம்
கோழி இறைச்சி, 100 கிராம்
வெள்ளைப்பூண்டு, 20 கிராம், எண்ணெய் 30 கிராம்
கொஞ்சம் உப்பு, சர்க்கரை, மிளகாய் ஆகியவை எடுத்துவையுங்கள்.
ராஜாராம்—சரி, இந்தப் பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கிறது. இனி, எப்படி சமைப்பது என்று சொல்லுங்கள்.
கலைமகள்—முதலில், செலரி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து, துண்டுகளாக அரியுங்கள். தட்டில் வைத்து, கொஞ்சம் உட்பு சேர்த்து, வைக்கவும். 10 நிமிடத்துக்குப் பிறகு, குளிர் நீரில் போட்டு, உடனடியாக எடுத்துவிடுங்கள்.
ராஜாராம்—இனி, செலரியையும் வெள்ளரிக்காய்யையும் தட்டில் வைத்து, சில வெள்ளைப்பூண்டு சிறிய துண்டுகள், கொஞ்சம் சர்கரை, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். சரிதானே?
கலைமகள்—சரிதான். ராஜா, நீங்கள் சீனாவில் அரை ஆண்டுக்கும் கூடுதலாக வசிக்கிறீர்கள். சீன உணவுகளை நன்றாக தயாரிக்க முடியும் போல் இருக்கிறதே. அப்புறம், கோழி இறைச்சியை தயாரிப்போம்.
ராஜாராம்—எப்படி செய்யணும்?
கலைமகள்—கோழி இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கிய பின், வாணலியை அடுப்பின் மீது வைத்து, அரை கோப்பை நீர் சேர்க்கவும். அப்புறம், கோழி இறைச்சியை அதில் போட்டு, கொஞ்சம் சர்கரை, மது, வெள்ளப்பூண்டு துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து, கவனமாக கிளற வேண்டும். கோழி இறைச்சியைச் சமைக்கும் போதே, நூடுல்ஸ்க்கான சாஸும் தயாரிக்கலாம்.
ராஜாராம்—சீன நூடுல்ஸ் தின்னும் போது, சாஸ் வேண்டுமா?
கலைமகள்—வேண்டும். சீனாவின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு சாஸ் வகைகள் உள்ளன. தென்பகுதியின் சாஸ் கொஞ்சம் இனிப்பானது. வடக்குப்பகுதி மக்களுக்கும் இது பிடிக்கும் நூடுல்ஸ் சாஸ், கொஞ்சம் உப்பாக இருக்கும்.
ராஜாராம்—அப்படியா! சாஸ் எப்படி தயாரிப்பது?
கலைமகள்—மிளகாய் சாஸ், சர்க்கரை, வெள்ளைப்பூண்டு துண்டு, உப்பு, எள்ளு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்தது நன்றாக கிளற வேண்டும். இப்போது நூடுல்ஸ், சாஸ், தயார்.
ராஜாராம்—சரி, இப்பொழுது, கோழி இறைச்சியும் வெந்துவிட்டது. அல்லவா?
கலைமகள்—ஆமாம். அடுத்து, நூடுல்ஸ் முழுமையாக வென்னீரில் போடணும். மிருதுவாக மாறிய பின்பு, சுடு நீரிலிருந்து எடுத்து, குளிர் நீரில் போடவும்.
ராஜாராம்—சரி, கலைமகள், நூடுல்ஸ், காய்கறிகள், இறைச்சி மற்றும் சாஸ் கலந்து, சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும். சரிதானே?
கலைமகள்—சரிதான். சீனர்களின் வழக்கத்தின் படி, இவற்றை ஒன்றாகக் கலந்து நன்றாக கிளற சாப்பிடலாம்.
ராஜாராம்—அப்படியா. சுவையாக இருக்கிறது. கலைமகள், அடுத்த முறை, என்ன உணவு கூறுகின்றீர்கள்?
கலைமகள்—அடுத்த வாரம், காளான் கோழிப்பூண்டு என்ற சூப் தயாரிப்பது கூறுவேன். இதற்கு காளான், கோழி இறைச்சி, உப்பு, எண்ணெய் முதலியவற்றை முன்கூட்டியே எடுத்துவைத்திருங்கள்.
|