• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-02 13:47:36    
துணியில் அழகான பூவேலை

cri

தெற்மேற்கு சீனாவின் குவைசு மாநிலத்தில் வாழும் மியேள இன பெண்கள் தலைமுறை தலைமுறையாக, துணியில் செய்துவரும் பூவேலைகள், சீன நாட்டுப்புற கலைகளில் குறிப்பிடத்தக்கவை. ஆனால், சமூக நவீனமயமாக்க வளர்ச்சியுடன், இந்த பழைய தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் மியேள இனச்சேர்ந்தவர் சாங் சுன்யிங் அம்மையார், பூவேலை செய்யும் தொழில் நுட்பத்தை நன்றாக அறிந்தவர் மட்டுமல்ல, அதை, வளர்ப்பதில் மாபெரும் பங்காற்றியுள்ளார்.

மியேள இனம், குவைசு மாநிலத்தில் குழுமிவாழும் சிறுபான்மை தேசிய இனமாகும். அவர்களின் வாழ்க்கையில், பூவேலை செய்யும் தொழில் நுட்பம், பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. அவர்களின் அன்றாட உடைகளிலும், பயன்பாட்டுப் பொருட்களிலும் அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மியேள இன பெண்கள், 7 அல்லது 8 வயது முதல், பூவேலை செய்வதைக் கற்றுக்கொள்ள வேண்டும். 14, 15 வயதில் சில நுட்பங்களில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர். எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த, சாங் சுன்யிங் கூறியதாதவது:

பெரிய நகரில், அறிவு இல்லாதவர்கள், அலட்சியம் செய்யப்பட்டனர். எமது மியேள இனத்தில், பூவேலை செய்யத் தெரியாதவர்கள், அலட்சியம் செய்யப்பட்டனர். இதனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறு வயதிலிருந்தே பூவேலை செய்வது மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.

பேட்டி அளிக்கும் போது, அவர் மியேள இன விழா ஆடையை சிறப்பாக அணிந்திருந்தார். கருப்புச் சட்டை மற்றும் பாவாடையில், சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் அழகான பூவேலைகள் நிறைந்திருந்தன.

இந்த சட்டை, தமது சகோதரியுடன் இணைந்து தயாரித்தது என்றார் அவர். மியேள இன பூவேலைகளில், சுமார் 30 வகைகள் உள்ளன. இவற்றில் சில முறைகள் மிகவும் கஷ்டமானவை. பூவேலை செய்வதில் திறமை மிக்க சாங் சுன்யிங், அனைத்து தொழில் நுட்பத்தையும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்.

மியேள இனத்தின் பாரம்பரிய பழக்கத்தின் படி, பெண்கள் வெளியே போக கூடாது. வீட்டில் சிறிது வீட்டு வேலை செய்ய வேண்டும். அவர்களில், சாங் சுன்யிங் அறிவு மிக்கவர் ஆவார். அவர் 20 வயதில், ஊரை விட்டுப்புறப்பட்டு, வெளியில் வேலை செய்தார். தென் சீனாவின் குவான் சு மாநகரிலுள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் இயந்திர பூவேலை செய்யும் தொழிலாளியாக சேர்ந்தார். நவீன முறையில் ஒட்டுமொத்தமாக பூவேலை செய்வதை அறிவார். ஆனால், தமது மனதில் சாங் சுன்யிங்கிறற்கு, பழைய கையால் பூவேலை செய்வதுதான் பிடிக்கிறது. அவர் செய்த மியேள இன பூவேலைகள், பெய்ஜிங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர் பெய்ஜிங்கில் ஒரு தேசிய சட்டை கடையை திறந்து, மியேள இன ஆடைகளை விற்பனை செய்தார். பெய்ஜிங்கிலுள்ள வெளிநாட்டவர் பலருக்கு, இந்த தேசிய இன ஆடைகளை மிகவும் பிடிக்கும். அவர்கள், ஆடையிலுள்ள பூவேலைகளை வாங்கி, அலங்காரமாக மாற்றியுள்ளனர். இதனால், மியேள இன பூவேலைகளை வளர்க்கும் வழியை சாங் சுன்யிங் விரிவாக்கினார்.