• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-02 16:16:35    
திபெத்திற்கு வாழ்த்து

cri

திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி, அரசவை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி, மத்திய ராணுவ கமிட்டி ஆகியவை நேற்று வாழ்த்து செய்தியை அனுப்பின.

1965ஆம் ஆண்டில் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் மூலம், திபெத் வரலாற்றில் புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக, மத்திய அரசு மற்றும் பல்வேறு மாகாண அரசுகளின் ஆதரவுடன், பனி மூடிய பீடபூமியில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, திபெத்தில், அரசியல் அமைதியாக உள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. சமூகம் நிதானமாக உள்ளது. பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு வாழ்கின்றன என்று வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும், தேசிய இன மண்டல தன்னாட்சி அமைப்பு முறையிலும் உறுதியாக நின்றால், திபெத் பன்முக வளர்ச்சி காண முடியும் என்பதை திபெத்தில் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் முழுமையாக காட்டுவதாக வாழ்த்து செய்தி குறிப்பிடுகின்றது.