• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-06 07:17:18    
ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டி

cri

17வது ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டி, செப்டம்பர் திங்கள் 2ஆம் நாள் தென்கொரியாவின் செ சியூ தொ நகரில் நிறைவடைந்தது. சீன அணி, ஆடவர் குழுப் போட்டி, ஆடவர் ஒற்றையர் போட்டி, மகளிர் இரட்டையர் போட்டி, ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கு நிகழ்ச்சிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. சீன ஹாங்காங் அணி மகளிர் குழு போட்டி, மகளிர் ஒற்றையர் போட்டி, ஆடவர் இரட்டையர் போட்டி ஆகிய மூன்று நிகழ்ச்சிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது.

சீன வீரர் வாங் லி ச்சின் மிகவும் மதிப்புள்ள வீரர் என்ற விருதை பெற்றார். தென் கொரியாவின் வீரர் சுய் சியுவான் சென் மிகவும் வரவேற்கப்படும் வீரர் என்ற விருதை பெற்றார். இந்திய மகளிர் அணி மிகவும் முன்னேற்றமடைந்துள்ள அணி என்ற விருதை பெற்றது.

ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வாங் லி ச்சின் 4-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் வீரர் லீ ச்சிங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி, இரண்டு ஹாங்காங் வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்றது. வீராங்கனை லீ லிங் 4-0 என்ற செட் கணக்கில் வீராங்கனை லியூ சி பெய்யைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் வரலாற்றில் ஹாங்காங் வீராங்கனை ஒருவர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அரை இறுதிப் போட்டியில் அவர்கள் இருவரும் 4-2 என்ற ஒரே செட் கணக்கில் முறையே சிங்கப்பூரின் லீ ச்சியா வெய்யையும் சீனாவின் நியூ ச்சியன் பெங்கையும் தோற்கடித்தனர்.

முன்னதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர்களான கௌ லி செ, லீ ச்சிங் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. சீன அணியின் கோ யன், லியூ சி வென் ஜோடி மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது.

இந்த சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடவில்லை. மகளிர் குழு அரை இறுதிப் போட்டியில் சீன அணி தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டு, இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். சீனாவின் 5 வீராங்கனைகள் மகளிர் ஒற்றையர் போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்களில் நியூ ச்சியன் பெங் மட்டும் அரை இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

சீன வீரர்களான வாங் ஹௌ, சென் ச்சி, மாலுங் ஆகியோர் ஆடவருக்கான மூன்றாம் சுற்று போட்டியில் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து விலகினர். இதுவும் வரலாற்றில் முன்கண்டிராதது. 18வது ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டி 2007ஆம் ஆண்டு சீனாவின் ச்சியாங்சு மாநிலத்தின் யாங் சோ நகரில் நடைபெறும்.