• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-08 19:22:16    
ஆசிய மகளிர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டி

cri

செப்டம்பர் திங்கள் 3ஆம் நாள் 13வது ஆசிய மகளிர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டியின் மூன்றாவது சுற்று சீனாவின் ச்சியாங்சு மாநிலத்தின் தைசாங் நகரில் நடந்தது. சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் சீன ஹாங்காங் அணியைத் தோற்கடித்து தனது மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. ஜப்பான், தென் கொரியா, கஸகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் அவற்றின் மூன்றாவது பெற்றியை பெற்றன.

சீன அணிக்கும் சீன ஹாங்காங் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில், சீன அணியின் முக்கிய வீராங்கனைகளுக்குப் பதிலாக இளம் வீராங்கனைகள் போட்டியில் பங்குகொண்டனர். இரு தரப்புக்குமிடையில் ஆற்றல் வித்தியாசம் காரணமாக, ஹாங்காங் அணி பயனுள்ள தாக்குதல் எதையும் தொடுக்க முடியவில்லை. சீன அணியின் தாக்குதலுக்கு முன், ஹாங்காங் அணியின் பாதுகாப்பும் ஆற்றல் இழந்தது. எனவே, சீன அணி மிக விரைவில் 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இளம் வீராங்கனைகளின் செயல்பாட்டை பார்த்து சீன அணியின் தலைமை பயிற்சியாளர் சென் சுங் ஹௌ மனநிறைவு அடைந்தார். ஆனால் இளம் வீராங்கனைகளின் அடிப்படை திறனும் போட்டி உணர்வும் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

செப்டம்பர் 3ஆம் நாள் நடைபெற்ற இதர போட்டிகளில், ஜப்பானிய அணி 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்தது. தென் கொரிய அணி 3-0 என்ற செட் கணக்கில் வியட்நாம் அணியைத் தோற்கடித்தது. சீனத் தைபெய் அணி 3-0 என்ற செட் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்தது. கஸகிஸ்தான் 3-1 என்ற செட் கணக்கில் பிலிப்பைன் அணியைத் தோற்கடித்தது.

வட கொரியாவுக்கும் தாய்லாந்துக்குமிடையிலான போட்டி நீண்ட நேரமாக நீடித்தது. அனுபவமில்லாத வட கொரிய அணி முதல் இரண்டு செட்களில் தோல்வி கண்ட பின் மூன்றாம் செட்டில் வெற்றி பெற்றது. ஆனால் நான்காவது செட்டில் இரு தரப்பும் மிகவும் தீவிரமாக போட்டியிட்டன. இறுதியில் தாய்லாந்து அணி இந்த செட்டில் 32-30 என்ற புள்ளிகணக்கில் வட கொரியாவை தோற்கடித்து இறுதியில் 3-1 என்று செட்கணக்கில் வெற்றி வென்றது.

மூன்று சுற்றுப் போட்டிகளுக்குப் பின், ஏ பிரிவிலுள்ள சீனா, கஸகிஸ்தான், பீ பிரிவிலுள்ள ஜப்பான், தென் கொரியா ஆகிய நான்கு அணிகளும் மூன்று வெற்றிகளை பெற்றன. செப்டம்பர் 4ஆம் நாள் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.