• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-05 16:45:58    
சீனத்து காதலர் தினம்

cri

சீனாவில் சந்திர நாள் காட்டியின் படி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை சிஸி பண்டிகை என்கிறார்கள். இதற்கு ஏழாவது இரவு திருவிழா என்று அர்த்தம். இந்த ஆண்டில் ஆகஸ்ட் 11 அன்று இது கொண்டாடப்பட்டது. அந்த நாளன்று இரவில் சீனாவில் உள்ள இளம் பெண்கள் வானத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை பார்க்கின்றனர். இரண்டு பிரகாசமான நட்சத்திரங்கள் தெரிகின்றனவா என்று தேடுகின்றனர். பால்வீதியில் நேர் எதிர் எதிராகத் தெரியும் அக்கிலா மற்றும் வேகா நட்சத்திரங்களை அவர்கள் காதல் ஜோடியாக பாவிக்கின்றனர். இந்த நட்சத்திரங்களின் பின்னணியில் ஒரு சோகக்கதை உள்ளது.

முன்னொரு காலத்தில்
நியுலாங் என்றொரு மாடு மேய்ப்பவன் தனது அண்ணனுடன் சேர்ந்து வசித்து வந்தான். அவனுடைய அண்ணிக்கோ மச்சினனைக் கண்டால் வேம்பாகக் கசந்தது. கரித்துக் கொட்டினாள். வேறு வழியின்றி அண்ணனை விட்டு பிரிந்து சென்றான் நியூலாங். அவனுக்குத் துணையாக இருந்தது ஒரு கிழட்டுப்பசு மட்டுமே.
ஆனால் அது சாதாரணப் பசு அல்ல. முற்பிறவியிலே அது ஒரு தெய்வமாக இருந்தது. சொர்க்கத்தின் விதிகளை மீறியதால் சபிக்கப்பட்டு, பூமியில் பசுப்பிறவி எடுத்து காலந்தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. ஒரு நாள், தேவலோகக் கன்னிகைகள் நீராடும் ஒரு ஏரிக்கு நியூலாங்கை அந்தப் பசு அழைத்துச் சென்றது. அங்கு நீராடிக் கொண்டிருந்த பல தேவதைகளில் ஜினு என்ற அழகியைக் கண்டான். காதல் கொண்டான். அவள் அழகி மட்டுமல்ல. அபாரமான பின்னல் வேலையும் தெரிந்து வைத்திருந்தாள்.

இருவரும் கண்டவுடன் கருக்கொருமித்து காதலர் ஆயினர். விரைவில் திருமணமும் செய்து கொண்டனர். ஒரு மகனையும், மகளையும் பெற்றெடுத்து லட்சியத் தம்பதியாக வாழ்ந்தனர். ஆனாலும் சொர்க்கலோகப் பேரரசருக்கு கடும் கோபம். ஒரு தேவதையானவள், சராசரி மனிதனை மணந்து கொண்டது அவருக்குப் பிடிக்கவில்லை இத்தகைய கலப்புத் திருமணம் சொர்க்கத்தில் தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே ஜினுவை இழுத்து வரும்படி பேரரசியான தனது மனைவியை அனுப்பினார்.
காதல் மனைவி ஜினு சொர்க்கத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு விட்டதை அறிந்த நியூலாங் மனம் கலங்கினான். அவனுடைய ஏக்கத்தைக் கண்டு மனம் பொறுக்காத கிழட்டுப் பசு, "என்னைக் கொன்று, என்னோட தோலில் காலணி செய்து அணிந்து கொள். அது உன்னை சொர்க்கத்துக்கு கொண்டு போய் சேர்க்கும்" என்று கூறியது.
அவன் தனது தோளிலே ஒரு மூங்கில் கழியை வைத்து, அதில் கூடையைக் கட்டி, அந்தக் கூடைக்குள் தனது இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து, பசுவின் தோலினால் செய்யப்பட்ட மந்திரக் காலணிகளை காலில் மாட்டினான். மறுநிமிடமே, தனது மனைவியுடன் சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் பேரரசியைத் துரத்தத் தொடங்கி விட்டான். இதனால் கோபம் கொண்ட பேரரசி, தனது கொண்டை ஊசியை எடுத்து வானத்தின் குறுக்கே ஒரு கோடு போட்டாள். உடனே பால்வீதி தோன்றி, கணவனையும் மனைவியையும் பிரித்தது. நியூலாங்-ஜினு தம்பதியின் காதல் வேகத்தைக் கண்ட புறாக்கள் கைகொடுத்து உதவ முன்வந்தன. அவை பால்வீதிக்கு ஒரு பாலம் போட்டு, கணவனையும் மனைவியையும் சேர்த்து வைத்தன.