• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-06 10:26:44    
காதோடு பேசுவது கடினம்

cri
"என்ன, நான் சொன்ளது காதுல ஏறிச்சா?" என்றாள் என்மனைவி.

"என்ன சொன்னே?"என்று திரும்பக் கேட்டேன்.

"காதுல ஈயத்தைக் காச்சி ஊத்த"என்று புலம்பித்தீர்த்த படியே போனாள் மனைவி.

இந்தக் காட்சி எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது தான். மனைவியின் பேச்சு மட்டுமல்ல் எந்த ஒரு பெண்ணின் பேச்சும் ஆணின் செவிப்பறையை எட்டுவது கடினம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள ஷெபீஃடு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆணின் ஒலிக்கும் பெண்ணின் ஒலிக்கும் மூளை பிரதிபலிப்பதில் பெருத்த வேறுபாடு உள்ளது என்ற திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

ஆண்கள் பெண்களின் குரலைப் புரிந்து கொள்ள தங்கள் மூளையில் உள்ள இசை உணர்பகுதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் ஆணின் குரலைப் புரிந்து கொள்ள இவ்வளவு சிக்கலான மூளைச் செயல்பாடு தேவை இல்லை என்கின்றனர்.

"ஆணின் குரலைவிட பெண்ணின் குரல் மிகவும் சிக்கலானது. இதற்குக் காரணம் ஆண்-பெண் குரல் நாண்கள் மற்றும் குரல்வளையின் அளவும் வடிவமும் வித்தியாசப்படுகின்றது. மேலும் பெண்களின் இரலில் இயற்கையாகவே ஒரு மெலடி இருக்கின்றது. இதனால் ஆணின் குரலை விட பெண்ணின் குரலில் ஒலி அலைகள் மிகவும் சிக்கலான ஒரு விஸ்தாரத்தில் உள்ளன என்று" மைக்கேல் ஹன்ட்டர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்கிறார்.

காதுக்குள்ளே ஏதோ பேசுகின்றது என்று மருள்கிற பைத்தியங்களுக்குக் கூட ஆண் குரல்தான் கேட்கிறதாம். பைத்தியத்தின் மூளைக்கு பொய்யான பெண் குரலை விட பொய்யான ஆண் குரலே எளிதில் புரியக் கூடியதாக இருக்கலாம்.

வெண்மேகங்களை உருவாக்குவதற்காக காற்றில் கடல் நீரைத் தெளிக்கும் ஒரு முறை பற்றி பிரிட்டிஷ் அரசு ஆராய்ந்து வருகின்றது. இவ்வாறு உருவாகும் வெண்மேகங்கள் சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை பூமிக்கு அப்பால் திருப்பிவிட்டு உலகெங்கும் வெப்பநிலை உயர்வதைக் குறைக்கும் என்று இந்த நுட்பத்தைக் கண்டுபிடித்த எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீபன் சால்ட்டர் கூறுகின்றார். சிறுபடகுகளை கடலுக்குள் செலுத்தி அவற்றில் உள்ள நுண்மையான தெளிப்பான மூலமாக கடல் நீர் ஆகாயத்தில் தெளிக்கப்படும். கடல் நீரில் உள்ள உப்புப் படிவுகள் காற்றின் சுழற்சியினால் மேலே உயர்ந்து தாழ்வான வெண்முகில்களாகக் குவிந்து விடுகின்றன. உப்பினால் மேகம் வெண்மையாகி அதன் பிரதிபலிப்புத் திறன் அதிகரிக்கின்றது. மேலும் அதில் நீர்த்துளிகள் அதிகம் சேர்கின்றன. இதனால் சூரியனின் வெப்பக் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுருவுவது குறைகின்றது.

இந்த நுட்பத்தைக் கண்டுபிடிந்த ஸ்டீபன் சால்ட்டர் கடல் அலையில் இருந்து மின்சாரம் எடுக்கும் கருவியை முதன் முதலில் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்ஐவி கிருமி தொற்றிய கணவன் தனது மனைவியுடன் உடலுறவு கொண்ணாமலே அவளைக் கருத்தலிக்கச் செய்யும் ஒரு நட்பத்தைச் செயல்படுத்துவது பற்றி தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் பரிசீலித்துவருகின்றது. எச்ஐவி கிருமி ஆணின் விந்தில் தான் இருக்கின்றது. விந்தணுவில் அல்ல என்று தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் எய்ட்ஸ் நிபுணர் ஒருவர் கூறினார். இந்த நுட்பத்தின் வீழ் எச்ஐவி கிருமி தொற்றிய ஒரு கணவரின் விந்தணு மனைவியின் சினைமுட்டை உருவாகும் காலத்தில் அவளுடைய கருப்பைக்குள் நேரடியாக ஊசி மூலம் செலுத்தப்பட்டு செயற்கைக் கருத்தரிப்புச் செய்யப்படும். ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த சேவை கிடைக்கின்றது.