• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-08 08:45:33    
கணிணி மூலம் வேளாண் வளர்ச்சி

cri
ஏ.........சீன அரசு வேளாண் தகவல் திட்ட பணி தொழில் நுட்ப ஆய்வு மையம் எப்போது முதல் டிஜிட்டல் வேளாண் தொழில் நுட்ப ஆராய்ச்சியையும் பயன்பாட்டு நிகழ்ச்சிகளையும் துவக்கியது. இதில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது. அது பற்றி கூறலாமா ?

பி.......1999ம் ஆண்டு சீன அரசு வேளாண் தகவல் மையம் அப்போதைய அரசு திட்டமிட்டல் ஆணையத்தின் ஆதரவுடன் டிஜிட்டல் வேளாண் நுட்பத்தை ஏற்றுக் கொண்டது. இதற்கு துவக்கத்தில் 5 கோடியே 20 லட்சம் யுவான் முதலீடு செய்துள்ளது. பெய்சிங் புறநகரில் மாதிரி பிரதேசத்தை நிறுவியுள்ளது. வெளிநாடுகளில் உள்ழ முன்னேறிய வேளாண் தொழில் நுட்பத்தையும் சாதனங்களையும் உட்புகுத்தி அவற்றை நன்றாக கற்றுக் கொண்டு தற்சார்பான ஆராய்ச்சி வளரச் செய்துள்ளது. இந்த அடிப்படையில் சீனாவின் மற்ற இடங்களிலும் பரப்பியுள்ளது. 2000ல் சீன வேளாண் பல்கலைகழகம், ஹெலுன்சியான் பண்ணை ஆணையம், சீன வேளாண் அறிவியல் ஆய்வகம் முதலிய நிறுவனங்கள் இதில் பங்கு கொண்டு பெருமளவிலான ஆராய்ச்சியை துவக்கியுள்ளன.

ஏ.......குறுகிய 5 ஆண்டுகளில் அவை எத்தகைய முன்னேற்றம் அடைந்துள்ளன ?

பி.......இதற்கிடையில் தகவல்களைத் திரட்டி விளை நிலவியல் தகவல் தொகுதி, தகவலை பகுதாராயும் வேளாண் வரைப்பட தொகுதி உரம் தூவும் இயந்திரங்கள், கிருமி நாசினியை தூவும் கருவி முதலியவற்றை ஆராய்ந்து உருவாக்கியுள்ளன. மேலும் பெரியதாக விளங்கும் பலநோக்கு ஆய்வுக் கூடங்களின் தொகுதியையும் இந்த நிறுவனங்கள் கூட்டாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளன.

ஏ........டிஜிட்டல் வேளாண்மை அரசுக்கு சவால் விடுக்கும் ஓரு குறிக்கோளாகும். இதன் ஒரு பகுதியான வேளாண் நுட்பங்களின் வளர்ச்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இது பற்றி விபரமாக எடுத்து கூறலாமா ?

பி......ஆமாம். இந்த தொழில் நுட்பம் கோதுமை, மக்காச் சோளம் முதலிய பயிர்களை பயிரிடுவதில் பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான சாகுபடி நுட்பங்கள் தேவைப்படும் கோரிக்கையை பணப் பயிர்களான புகையிலை, தேயிலை ஆகியவற்றில் இந்த நுட்பத்தின் பயன்பாடும் அதிகமாக காணப்படுகின்றது. விளைச்சலை அதிகரிக்கும். உரத்தின் பயன்பாடு சிக்கனமாகியுள்ளது. உற்பத்தியிலும் தரம் உயர்ந்துள்ளது.

ஏ........தற்போது மாதிரி பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்டு வரும். பெருமெடுப்பில் அறுவடை செய்யும் இயந்திரம் போன்றவை வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன. இதற்கு செலவு 10 லட்சம் யுவான் எட்டியது. எந்த வழிமுறையில் இந்த உற்பத்தி செலவைக் குறைக்க முடியும்?

பி........நுணுக்கமான வேளாண் தொழிலில் ஈடுபட்டால் முக்கிய தொழில் நுட்பத்தில் சுயமான கண்டுபிடிப்புக்களை ஆராய்ந்து வளர்க்க வேண்டும். தகவலை திரட்ட வேண்டும். உள்நாட்டு நுட்பத்தை சார்ந்து நுட்பமான வேளாண் தகவல்களை திரட்டி பகுத்தாராய்ந்து பயன்படுத்தும் ஒர் அமைப்பை நிறுவ வேண்டும். தற்போதைய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிலைமையை பார்த்தால் சீனாவில் 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் நுணுக்கமான வேளான் தொழில் நுட்பம் நனவாக்கப்படலாம். இதனால் அதிக செலவு என்ற பிரச்சினையை தீர்க்கப்பட்டு சமூகமய உற்பத்தி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்.