நேயர்களின் சில கருத்துகள்
cri
ரா------நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு இருகரம் கூப்பி நேயர்களை வரவேற்பது
வி-------விஜயலட்சுமி----தாஜாஹாங் நேயர்களே
ரா--------வணக்கம் நான் ராஜாராம். இன்றைய நேயர் நேரத்தில் முதல் கடிதம் நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி தூணேரி நேயர் எஸ் பன்னீர் செல்வம் எழுதியது. சீன வானொலியின் தமிழ் முயற்சி பாராட்டிற்குரியது. ஆனால், சரியான உச்சரிப்பு இல்லையே என்கிறார். மேலும் சீன வானொலி நேயர்கள் பரிசை எதிர்நோக்கி கடிதம் எழுதுபவர்கள் என்ற கருத்தை மாற்ற நல்ல தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்.
வி--------உச்சரிப்பு பற்றிய நேயரின் கருத்தை கவனத்தில் கொள்கிறோம். நாங்கள் அறிந்த வரை எமது நேயர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், மனதில் பட்ட கருத்துக்களை தயங்காமல் எழுதுகிறார்கள். தொடர்ந்து எழுதுகிறார்கள். நிகழ்ச்சிகளின் தரத்தில் தான் எப்போதுமே எங்கள் கவனம். சரி ராஜா, அடுத்த கடிதம்
ரா------கடந்த ஒரு மாதமாகத்தான் சீன வானொலியைக் கேட்கிறேன். அற்புதமான ஒலிபரப்பு, நிகழ்ச்சிகலை அழகாக வடிவமாத்து, செய்திகளை விரிவாகவும் விளக்கமாகவும் அளித்து வருகிறீர்கள் என்று பாராட்டியுள்ளார். வளவனூர் நேயர் சி டி முத்து சிவக்குமாரன். சி ஆர் ஐ நெட் என்ற செல்போன் வழியாக எஸ் எம் எஸ் பரிமாற்றம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. CRI நேயர்களஇன் தொடர்புகள் வலிமை பெறுகின்றன என்று கூறி நேயர் மன்ற நிர்மாகிகளுக்குப நன்றி தெரிவிக்கிறார் செஞ்சி நேயர் ஜி கே ராஜமாணிக்கம். ஜூன் 21 அன்று ஒலிபரப்பான திபெத் பற்றிய செய்தி அருமை என்கிறார். நாகர் கோவில் பிரின்ஸ் ராம்ர்ட் சிங்
வி-----நேயர்களின் பாராட்டுக்கு நன்றி. குறிப்பாக எஸ்எம்எஸ் பரிமாற்றம் மூலம் நேயர்களின் தொடர்பு வலுப்பட்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது
ரா-------கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றும் போது எல்லாம், இணைய தளத்தை பார்க்காமல் எழுதத் தொடங்கி வருகிறேன் என்கிறார் சென்னை த ஞானசேகர். ஜூலை இராண்டாவது வராத்தில் ஒலிபரப்பான சீன சமூக வாழ்வு ஆவித்திருட்டு என்ற சீனப் பண்பாடு நிகழ்ச்சி, சீனாவில் இன்பப் பயணம் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் எடிசன் பற்றிய கட்டுரை ஆகியவற்றை பாராட்டியுள்லார். ஆவித்திருட்டு பரியாத பதிராக இருக்கிறது. விளக்க முடியுமா. இன்பப் பயணம் பற்றிய நிகழ்ச்சிகளின் தகவல்களை புத்தகமாக வெளியிட முடியுமா என்று கேட்கிறார்.
|
|