• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-13 09:31:55    
ஆசிய போட்டியில் கலந்துகொண்ட சீன மகளிர் அணி

cri

செப்டம்பர் 8ஆம் நாள் 13வது ஆசிய மகளிர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டி சீனாவின் சியாங்சு மாநிலத்தின் தைசாங் நகரில் நிறைவடைந்தது. சீன அணி எந்த தடையையும் சந்திக்காமல் சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த முறை கசகிஸ்தான் ஜப்பானைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் சீன அணியுடன் மோதி, இரண்டாம் இடம் பெற்றது எதிர்பாராதது. சீன அணி போட்டியிட்ட எட்டு பந்தயங்களிலும் 3-0 என்ற செட் கணக்கில் எதிர் தரப்பைத் தோற்கடித்தது. இவ்வளவு எளிதாக சாம்பியன் பட்டம் பெற்றது சீனாவும் எதிர்பார்க்கவில்லை.

அரை இறுதிப் போட்டியில் ஜப்பான் 2-3 என்ற செட் கணக்கில் கசகிஸ்தானிடம் தோல்வி கண்டதால், இறுதிப் போட்டி சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் நடைபெறவில்லை. எதிர் தரப்புகள் பலவீனமாக இருப்பதால், சீன அணி அதிக தவறுகள் இழைத்த போதிலும் தங்கப் பதக்கத்தை இழக்கவில்லை. போட்டியில் கலந்துகொண்ட புதிய வீராங்கனைகள் பயிற்சி செய்யும் வாய்ப்பும் அதிகமாக கிடைக்கவில்லை. எனவே, சீன அணியை பொறுத்தவரையில் இந்த போட்டியில் அதிக பயன் பெறவில்லை என்று கூறலாம்.

முழு போட்டியைப் பார்த்தால், ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு அணிகளின் ஆற்றல் குறைந்துள்ளது. தென் கொரிய அணி, கால் இறுதிப் போட்டியில் மிகவும் கடஷ்டமான நிலையில் தாய்லாந்து அணியைத் தோற்கடித்தது. அரை இறுதிப் போட்டியில் சீன அணியுடன் மோதிய போது, அறவே எதிர் ஆற்றல் இல்லாமல் கடும் தோல்வி கண்டது. ஆனால், கசகீஸ்தான் அணி வலுவடைந்துள்ளதால், ஆசியாவின் சில வலுவான அணிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
கசகிஸ்தான் அணி, ஐரோப்பிய அணிகளை போல் மிக உயரத்தில் கடும் தாக்குதல் தொடுப்பதென்ற முறையில் விளையாடும் அணியாகும். அதன் வீராங்கனைகள் உயரமானவர்கள்.

ஜப்பானிய அணி உள்ளிட்ட ஆசியாவின் பல அணிகள் அதனுடன் போட்டியிட்ட போது, மிகவும் இன்னல் நிலையில் இருந்தன. எனவே, இந்த முறை, ஜப்பானிய அணி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. கசகிஸ்தான் அணி, வரும் காலகட்டத்தில் இதர அணிகளுக்கும் அச்சுறுத்தலாக திகழும் என்று போட்டிக்கு பின் சீன அணியின் பயற்சியாளர் சென் சுங் ஹோ கூறினார்.