• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-15 12:14:07    
உலக ஜூடோ சாம்பியன் பட்டப் போட்டி

cri

செப்டம்பர் திங்கள் 9ஆம் நாள் துவங்கிய உலக ஜூடோ சாம்பியன் பட்டப் போட்டி துவங்கியது. இப்போடியில் கலந்துகொண்ட சீனாவின் மூன்று புதிய வீரர்களும் தோல்வியுற்று போட்டியிலிருந்து மிக முன்னதாக வெளியேறினர்.

மகளிருக்கான 63 கிலோகிராம் பிரிவில் சீன வீராங்கனை சியு யு ஹுவா முதல் சுற்றிலே தோல்வி கண்டார். பின்னர் மறு மலர்ச்சி போட்டியில் அவர் நெதர்லாந்து வீராங்கனை வில்போட்செயுடன் சந்தித்தார். துவக்கத்தில் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் போட்டியின் கடைசி சில வினாடியில் அவர் வாய்ப்பை பற்றிக்கொள்ளவில்லை வெற்றி பெற தவறினார்.

போட்டிக்குப் பின்னர், பயிற்சியாளர் தோல்விக்கான காரணத்தை அவருடன் சேர்ந்து ஆராய்ந்தார். அப்போது அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது. சீனா அழைத்த ஜப்பானிய நிபுணர் சியு யு ஹுவாவிடம், அவர் இழைத்த தவறுகளை விளக்கிக் கூறினார். போட்டியில் சியூ யு ஹுவா, எதிராளியின் தந்திரத்தால் ஏமாற்றப்பட்டதால் ஒரு புள்ளி இழந்தார். இளம் வீராங்கனைகள் பொதுவாக இன்னல்களைச் சமாளிப்பதன் மூலம் தான் வளர்ந்துவருகிறார்கள். போட்டியிடுவது வாழ்வது போல, இன்னல்கள் மனிதன் பக்குவமடைவதற்கு துணையாக இருக்கும் என்றார் இந்த ஜப்பானிய நிபுணர்.

தவிரவும், மகளிருக்கான 70 கிலோகிராம் பிரிவு போட்டியில் சீன வீராங்கனை சாங் சன் ச்சியே, கியூபாவின். அ. காஸ்திலோவிடம் தோல்வி கண்டார். ஆடவருக்கான 81 கிலோகிராம் பிரிவு போட்டியில் சீன வீரர் கோ லே ஆஸ்திரியாவின் ஒரு வீரரிடம் தோல்வி கண்டார்.

இந்த மூன்று புதிய வீராங்கனைகளும் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அனுபவம் இல்லை, தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் தந்திரம் போதாது. எனவே தற்காலிகமாக தோல்வி காண்பது இயல்பே என்று சீன பயிற்சியாளர் பூ கோ யீ செய்தியாளரிடம் கூறினார். 9ஆம் நாள் போட்டியில் சீன வீராங்கனை துங் வென் மகளிருக்கான 78 கிரோகிராம் மேல் என்ற பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார்.