• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-13 17:28:37    
சீன மொழியில் அக்கறை செலுத்தும் அந்நியர்கள்

cri
ராஜாராம்........... சில நாட்களுக்கு முன்பு உலக சீன மொழி மாநாடு பெய்சிங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன மொழி கற்கும் அந்நியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டது. இது எந்த அளவுக்கு சரியான தகவல்?

கலை........சரியான தகவல்தான். எப்படி என்றால் சீன மொழியானது உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் மொழிகளில் ஒன்று.மேலும் கடந்த சில ஆண்டுகளாக சீனா வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்டிருப்பதால் பொருளாதாரம் மேலும் விரிவாகி வளர்ச்சியடைந்துள்ளது. இதனுடன் சீனாவுக்கும் பல்வேறு நாடுகளுக்குமிடையில் அன்றாடத் தொடர்புகள் அதிகரித்து விட்டன. மேலும் அதிகமான அந்நிய நிறுவனங்களும் சீனாவில் முதலீடு செய்து தொழிற்சாலைகளை நடத்துகின்றன. சீனாவில் பணிபுரிவதற்காக அந்நியர்களும் வெளிநாட்டு பயணிகளும் வந்து போய்க் கொண்டு இருக்கின்றனர். அதேவேளையில் உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி பயிலும் சீனர்களும் பொருளாதார மற்றும் வணிக துறையில் ஈடுபடும் மற்றும் சுற்றுலா மற்றும் செல்லும் சீன மக்களும் அதிகரித்துள்ளனர். சீன மொழி பல்வேறு நாட்டு மக்கள் சீனாவை அறிந்து கொள்வதற்கான முக்கிய கருவியாகியுள்ளது. எனவே பல நாடுகளின் அரசுகளும் கல்வி நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

ராஜாராம்... நீங்கள் தந்த தகவல் முக்கியமானது. நான் அறிந்தவரை, சீனாவை சுற்றியுள்ள நாடுகளான வியட்நாம், தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் மக்கள் தான் அதிக அளவில் சீன மொழி கற்கின்றனர். இதற்கு இந்த நாடுகளின் பண்பாட்டுக்கும் சீன பண்பாட்டுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது ஒரு காரணமா? மேலும் இந்த நாடுகள் சீனாவுடன் அதிகமான தொடர்பு கொண்டுள்ளதாலும் சீன மொழிக் கல்வி இந்த நாடுகளில் பரவலாகியுள்ளது என்று சொல்லலாமா?

கலை.........ஆமாம். வியட்நாம் நாட்டில் இளைஞர்கள் சீன மொழி கற்பது பற்றி வியட்நாம் கல்வி அமைச்சகத்தின் அதிகாரி VU MING TUAN கூறுவதைக் கேஷுங்கள்.

1  2