• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-13 17:28:37    
சீன மொழியில் அக்கறை செலுத்தும் அந்நியர்கள்

cri

 இப்போது வியட்நாம் மாணவர்கள் சீன மொழியை விரும்பிக் கற்கின்றனர். பல்கலைகழகத்தை தவிர, பல சீன மொழி மையங்களிலும் சீன மொழி கற்பிக்கும் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. பல மாணவர்கள் ஓய்வு நேரத்தில் சீன மொழி கற்கின்றனர்.

ராஜாராம்.......வியட்நாம் மட்டுமல்ல, தென் கிழக்காசிய நாடுகளிலுள்ள மக்களிடையையும் சீன மொழி கற்கும் உற்சாகம் அதிகமாக உள்ளது. அந்த நாடுகளில் பல உயர் கல்வி நிலையங்களிலும் நடுத்தர மற்றும் துவக்க பள்ளிக் கூடங்களிலும் சீன மொழி வகுப்பு நடத்தபடுகின்றது. சில சமூக பயிற்சி நிறுவனங்களும் சீன மொழி வகுப்பு நடத்துகின்றன. புள்ளிவிரங்களின் படி, தற்போது தென்கிழக்காசியாவில் 16 லட்சம் மக்கள் சீன மொழியை கற்றுக் கொள்கின்றனர்.

கலை................வியடநாம் தவிர தென் கொரியா ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளில் சீன மொழி கற்போரின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே உள்ளது. தென் கொரியாவில் சுமார் 200 பல்கலைக்கழகங்களில் சீன மொழித் துறைகள் உள்ளன. சீன மொழிப் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான தேர்ச்சிப்பாடமாக உறுதிப்படுத்தப்

பட்டுள்ளது. ஜப்பானில் 20 லட்சத்துக்கு அதிகமானோர் சீன மொழி கற்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சீன மொழி நடத்தும் இடைநிலை பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

ராஜாராம்.......ஆசியவில் சீன மொழி கற்கும் நிலைமை பற்றி ஓரளவு அறிந்து கொண்டேன். ஐரோப்பாவில் சீன மொழியின் செல்வாக்கு எப்படி?

KERSTIN STOUM, ஜெர்மன் MINSTEL பல்கலைக்கழகத்தின் மாணவி. இடைநிலை பள்ளியில் பயின்ற போது அவள் சீன மொழியிலும் சீனாவிலும் அக்கறை செலுத்தினார். ஆனால் அப்போது அவள் பயின்ற இடைநிலை பள்ளிக் கூடத்தில் சீன மொழி வகுப்பு இல்லை. ஆகவே அவருடைய ஆர்வம் நிறைவேற வில்லை. பல்கலைக்கழகத்தில் பயின்ற போது அவருடைய விருப்பம் நிறைவேறியது. சீன மொழியை தமது விருப்பப் பாடமாக எடுத்தார். 4 ஆண்டுகள் பயின்ற பின் இப்போது அவள் சரளமாக சீன மொழியில் உரையாட முடிகிறது. நமது செய்தியாளரிடம் தம் அனுபவத்தை தெரிவிக்கிறார். கேளுங்கள்.

 கலை..........தற்போது சீனாவில் பல வாய்ப்புக்கள் உள்ளன. பல ஜெர்மன் நிறுவனங்கள் சீனாவில் கிளைகளை நிறுவியுள்ளன. ஜெர்மனிக்கும் சீனாவுக்குமிடையில் வணிக உறவு நெருங்கியுள்ளது. எனவே சீன மொழி கற்பதால் வேலைவாய்ப்பு பெற முடியும் என்றார் அவர்.

ராஜாராம்.....ஜெர்மனி தவிர, மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் சீன மொழி பரவலாக கற்பிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பிரான்ஸில் தற்போது 30 ஆயிரம் மக்கள் சீன மொழி கற்கின்றநர். இந்த எண்ணிக்கை ஐரோப்பாவில் முதலிடம் வகிக்கின்றது. பிரிட்டன் சீனாவின் தொடர்புடைய துறைகளுடன் தொடர்பு கொண்டு ஒத்துழைத்து இடை நிலை பள்ளியில் சீன மொழி கற்பிக்கும் பாட நூலை இயற்றியுள்ளது. ரஷியாவில் சீன மொழி மிகவும் வரவேற்கப்படுகின்றது. பல நிறுவனங்கள் உயர் ஊதியம் வழங்கி வெளியுறவு அமைச்சகம் போன்ற வாரியங்களுடன் சீன மொழி தெரிந்த திறமைசாலிகளை பெற போட்டியிட விரும்புகின்றன.


1  2