• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-13 17:28:37    
அறிவியல் மாநாடு

cri
நான்காவது சர்வதேச பாக்டீரியா ஒழிப்புப் பொருட்களின் பொருட்காட்சி செப் 2 அன்று குவாங்சு நகரில் தொடங்குகிறது. இந்தப் பொருட்காட்சியில் முதல் தடவையாக பாக்டீரியா ஒழிப்பு நுட்பங்களும் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படும். சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவிய பிறகு மக்களிடையே பாக்டீரியாக்களை ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வீடுகளில் தூய்மைப்பராமரிப்புக்காக பாக்டீரியா ஒழிப்புப் பொருட்களை வைக்கலாம். குறிப்பாக பிளாஸ்டிக், வர்ணம், துணிகள், மின்சாதனங்கள், ஆவியவற்றைத் தயாரிக்கும் போது பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகுவதைக் கட்டுப்பபடுத்தக் கூடிய சில விசேஷ பொருட்களையும் சேர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 இடிமின்னலைக் கட்டுப்படுத்த புதுவழி ஒன்றை சீன அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். வானிலைக் கண்காணிப்புக்கு உதவும் ராக்கெட்டுகளை பயன்படுத்தி பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இடிமின்னலை இறக்கமுடியும் என்று சீன அறிவியல் கழகம் மற்றும் சீன வானிலை ஆய்வுக் கழகத்தின் விஞ்ஞானிகள் பரிசோதனைகள் நடத்தி கண்டறிந்துள்ளனர். புயல் வீசும் போது எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டு மானாலும் இடிமின்னல் தாக்கலாம். அப்போது வானில் ஒரு ராக்கெட்டை சுட்டு அந்த இடிமின்னலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர் ZHANG YI JIUN கூறினார்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 10 விழுக்காட்டினர் தினமும் ஒரு மல்ட்டி வைட்டமின் மாத்திரை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் சுவாசம், சருமம், வயிறு போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்று ந்ம்புகின்றனர். ஆனால் இது தவறு. நோய்த் தொற்று ஏற்படும் அபாயத்தை வைட்டமின் மாத்திரைகளால் தடுக்க முடியாது என்று லண்டனில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் ஹெப்பட்டிஸ் –பி எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருந்து ஒன்றை ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள ரோச்சே மருந்து நிறுவனம் ஜுலை மாதம் உருவாக்கியுள்ளது. உலகெங்கும் ஹெப்படிட்டிஸ்-பி கிருமி தொற்றிய ஒரு கோடியே 50 லட்சம் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சீனாவில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. பெகஸிஸ் எனப்படும் இந்த மருந்து மூலம் ஹெப்படிட்டிஸ்-பி-கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சீனா அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மருந்துத்துறை அதிகாரிகள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர. இந்த மருந்து HBV கிருமி பெருகுவதைக் கட்டுப்படுத்தக் கூடியது.

இத்தாலியின் மிகப் பெரிய போ நதியின் நீளம் 652 கி.மீ. இதில் தினமும் 4 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கோகெய்ன் என்ற போதைப் பொருள் அடித்துச் செல்லப்படுவதாக இத்தாலிய அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இது எப்படி? கோகெய்ன் போதைப் பொருள் உட்கொள்வோர் கழிக்கும் சிறுநீர் ஆற்றிலே கலக்கிறது. அந்தச் சிறுநீரில் பெந்ஸோயிலெகோனைன் என்ற துணைப் பொருள் வெளிப்பட்டு நதிநீரை மாசுபடுத்துகின்றதாம்.

நாய் மாடு போன்ற வீட்டில் வளரும் மிருகங்கள் உடம்பில் காயம் பட்டால் நக்கிக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். கிராமத்தில் மனிதர்கள் கூட பருக்கள் போன்ற கொப்புளங்கள் மீது எச்சில் தடவுவார்கள். நமது எச்சிலுக்கு குணமாக்கும் தன்மை உண்டு என்கிறார்கள். இந்த அடிப்படையில் அமெரிக்காவின் ஒரேகான் உயர் நிலைப்பள்ளியில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்காட் ரீட் அணியில் காயம்பட்ட ஒரு மாணவனின் காயத்தை நக்கிக் கொடுத்து அவனுக்கு விளையாட உற்சாகம் அளித்தார். ஆனால் அவருக்குப் பள்ளி நிர்வாகம் கண்டனம் தெரிவித்து இரண்டாண்டுகள் கண்காணிப்பில் வைத்தது. அறிவியல் ஆசிரியரான ஸ்காட்ரீட் ரத்தத்தினால் நோய்க்கிருமிகள் பரவக் கூடிய அபாயத்தை அலட்சியப்படுத்தி விட்டார் என்று காரணம் கூறப்பட்டது.