• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-12 21:07:24    
சிஸி பண்டிகை

cri

சொர்க்கலோகப் பேரரசரும் மனம் நெகிழ்ந்தார். நியுயாங் ஜினுவும் ஆண்டுக்கு ஒருமுறை, ஏழாவது மாதத்தின் ஏழாம் நாள் இரவில், சந்தித்து கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார். அன்று முதல் இருவரும் பால் வீதியில் எதிரும் புதிருமாக இரண்டு நட்சத்திரங்களாக மின்னத் தொடங்கி விட்டனர். அவர்கள் சந்திக்கும் நாள் சிஸி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சிஸி பண்டிகை தினத்தன்று மழை செய்தால், அது ஜினு தனது கணவனைச் சந்தித்ததால் வடிக்கும் ஆனந்தக் கண்ணீர் என்று சீனத்துப்பாட்டிகள் தங்களது பேரக் குழந்தைகளுக்கு கதை செல்லும் ஒரு பாரம்பரியம் கி.மு.206 முதல் கி.பி. 220 வரை ஆண்ட ஹான் வமிச காலத்தில் இருந்து வழங்கி வருகிறது.

இந்த சிஸி பண்டிகை இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் 11 அன்று கொண்டாடப்பட்டது.
பண்டைக் காலத்தில் இது காதலர் தினமாக மட்டுமல்ல, புதல்விகளின் தினமாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கன்னிப்பெண்கள் தங்களுக்கு திருப்தியான ஒரு திருமணமும், அறிவும், ஆற்றலும் தர வேண்டும் என ஜினு தேவதையை வழிபட்டார்கள். இந்த வழிபாட்டு முறை சீனாவில் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபட்டது. ஷான்துங் மாநிலத்தில் இளம் பெண்கள் பழங்களையும் கேக்குகளையும் தேவதைக்குப் படையலிட்டு தெளிந்த அறிவு வேண்டும் என்று வரம் கேட்பார்கள். அந்தப் படையல் பொருட்கள் மீது சிலந்தி வலை பின்னுமானால், நெசவுப் பெண்ணான ஜினு வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்பதற்கு அறிகுறியாகக் கருதப்பட்டது.
வேறுசில இடங்களில், ஏழு தோழிகள் ஒன்று சேர்ந்து, டம்ப்ளிங் தயாரிப்பார்கள். தனித்தனியான மூன்று டம்ப்ளிங்குகளில் ஒன்றில் ஒரு ஊசியும், ஒன்றில் செம்பு நாணயமும், இன்னொன்றில் பேரீச்சம் பழமும் பூர்ணமாக வைத்திருப்பார்கள். இவற்றில் ஊசி, நெசவுத்திறனுக்கு சின்னமாகும். செப்பு நாணயம் நல்ல அதிர்ஷ்டத்துக்கு அறிகுறி. பேரீச்சம் பழம், சீக்கிரமே திருமணம் நடக்கும் என்பதைக் கூறுவது.

சில இளம் பெண்கள் நெசவுப் போட்டியிலும், பின்னல் போட்டியிலும் ஈடுபட்டு, யாருடைய கை கலை நுட்பம் மிக்கது, யாருக்கு தெளிவான அறிவு உள்ளது என்பதை தீர்மானிப்பார்கள்.  பண்டைக்காலத்தில், நல்ல தாயாகவும், தாரமாகவும் இருப்பதற்கு கைவேலைப்பாடும், தெளிந்த அறிவும் தேவை என்று கருதப்பட்டது.
தென் சீனாவில், இளம் பெண்கள், வண்ணத்தாள்கள், புல் மற்றும் நூலைக் கொண்டு சின்னஞ்சிறு கலைப் பொருட்களைச் செய்தனர். பிறகு ஒரேதடவையில் ஏழு ஊசிகளுக்குள் நூல் கோர்க்கும் போட்டியிலும் ஈடுபட்டனர்.
நியூலாங்-ஜினு காதல் கதையும், சிஸி பண்டிகையின் சிறப்பும் தலைமுறை தலைமுறையாக வழங்கி வந்து, இப்போது மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது. இக்காலச் சீன இளைஞர்கள், பிப்ரவரி 14 வாலன்டைன் தினத்தைத்தான் காதலர் தினமாகக் கொண்டாடி, ரோஜாக்களையும், சாக்லேட்டுகளையும் பரிமாறிக் களிக்கின்றனர். சிஸி பண்டிகை கூட சீனத்து வாலன்டைன் தினம் என்று தான் அழைக்கப்படுகிறது.