சீனாவின் கால் நடை வளர்ப்பு தொழில் கடந்த 20 ஆண்டுகால தொடர்ச்சியான, வேகமான வளர்ச்சியினால், கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறி விட்டது. விவசாயிகளுக்கு வருமானம் தரும் முக்கிய தொழிலாக உருவெடுத்துள்ளது என்று சீன வேளாண் அமைச்சகம் கூறுகிறது. சீன Hang Zhou நகரில் நடத்திய அலுவல் கூட்டத்தில் செய்தியாளர் இதை அறிவித்தார். சீனாவில், கால் நடை வளர்ப்புத் தொழில், பாரம்பரிய தொழிலிருந்து நவீன தொழிலாக மாறும் கட்டத்தில் உள்ளது. இது நாளுக்கு நாள் நியாயமான அளவில், ஒரு கூட்டு நிர்வாகத் தொழிலாக பரவி வருகிறது. இத்தொழிலின் வளர்ச்சியினால், விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளத. கடந்த ஆண்டு சீன கால் நடை வளர்ப்புத்தொழிலின் மொத்த மதிப்பு, முதன்முதலாக ஒரு லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. வேளாண்துறையின் மொத்த மதிப்பில் இது 30 விழுக்காட்டுக்கு அதிகமாகும்.
|