ஆகஸ்ட் திங்களில் சீன நிதி
cri
ஆகஸ்ட் திங்களில், சீனாவின் நிதி நிலைமை சீராக இருந்தது. ரெ மின் பிங் மாற்று விகிதத்தில் சிறிது ஏற்றத்தாழ்வு காணப்பட்டதாக சீன மக்கள் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
இதற்கிடையில், ரெ மின் பிங் தொடர்பான பல்வேறு கடன்கள் உரிய அளவில் அதிகரித்துள்ளன. குறுகிய கால கடன் விரைவாக கூடுதலாகியது. நடுத்தர மற்றும் நீண்டகால கடன் அதிகரிப்பு வேகம் குறைந்தது. பண சேமிப்பு விரைவாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் திங்களின் இறுதியில், ரெ மின் பிங் சேமிப்பு 13 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது 17 விழுக்காடு அதிகம்.
|
|