தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் நாம் மீண்டும் சந்தித்துள்ளோம். மிக மகிழ்ச்சி. எப்படி நலமா?
முதலில் கடந்த முறை நாம் படித்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 20ஆம் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ளது.
முதலில் இரண்டு சொற்களை பார்க்கின்றோம்.
ZAI JIAN
வணக்கம்
இந்த சொல் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்தது.
MING TIAN JIAN
நாளை சந்திப்போம்.
நீங்கள் ஒரு சீனரிடம் விடைபெறும் போது, இந்த இரண்டு சொற்களை சொல்லலாம்.
இப்பொழுது ஒரு உரையாடலை பார்க்கின்றோம். இதுவும் விடைபெறும் போது பயன்படுத்தப்படுகின்றது.
ZAI JIAN, HUAN YING NIN ZAI LAI!
XIE XIE, ZAI JIAN!
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு—
ZAI JIAN, HUAN YING NIN ZAI LAI—
வணக்கம், மீண்டும் வருக!அல்லது மீண்டும் வருவதை வரவேற்கின்றோம்.
XIE XIE, ZAI JIAN—
நன்றி வணக்கம்!
இந்த உரையாடலில் ZAI என்றால், மீண்டும் என்பது பொருள். LAI என்றால் வா என்பது பொருள். ZAI LAI என்றால் மீண்டும் வருவது. எடுத்துக்காட்டாக, HUAN YING ZAI LAI ZHONG GUO,சீனாவுக்கு மீண்டும் வருவதை வரவேற்கின்றோம். நாங்கள் இந்தியாவை விட்டு புறப்படும் போது நீங்கள் எங்களிடம், HUAN YING ZAI LAI YIN DU என்று சொல்லலாம்.
இப்பொழுது புதிய பாடத்தை தொடங்குவோம். ஒரு புதிய உரையாடலை பார்க்கின்றோம். இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 21ஆம் பக்கத்தில் உள்ளது.
ZAI JIAN, YI LU SHUN FENG!
ZAI JIAN, XIE XIE NIN LAI SONG WO!
உங்கள் நண்பர் பயணம் செய்ய வேறு ஒரு இடத்துக்குப் புறப்பட உள்ளார். நீங்கள் அவரை வழியனுப்பும் போது, இந்த உரையாடலை பயன்படுத்தலாம்.
இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை வழங்குகின்றோம்.
ZAI JIAN, YI LU SHUN FENG!
வணக்கம், பயணம் சிறப்பாக அமையட்டும்!
ZAI JIAN, XIE XIE NIN LAI SONG WO!
வணக்கம், என்னை வழியனுப்ப வந்த உங்களுக்கு நன்றி!
இன்று நாம் ஒரு புதிய உரையாடலை படித்துள்ளோம்.
நன்றாக பயிற்சி செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், வெளியே போக்கும் போது, நீங்கள் அவரை வழியனுப்பினால் இந்த உரையாடலை பயன்படுத்துங்கள். அப்போது இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெறுவீர்கள் என்று நம்புகின்றோம்.
|