ஆகஸ்ட் திங்களில் தொழிற்துறை வளர்ச்சி
cri
கடந்த ஆகஸ்ட் திங்களில், சீனாவின் பெரிய மற்றும் நடுத்தர ரக தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, 59680 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகம் என்று சீனத் தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இவ்வாண்டின் முதல் 8 திங்களில், இந்த நிறுவனங்கள், 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவான் லாபம் ஈட்டின. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16.3 விழுக்காடு அதிகமாகும்.
|
|