• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-15 12:22:09    
அமெகித்தாவிஸ் சீன மொழி ஆர்வம்

cri

கலை..............நிலவியல் அமைப்புப் படி சீனாவுக்கு எதிரே நாடு அமெரிக்கா அங்கு பேசப்படும் அந்நிய மொழிகளில் சீன மொழி முக்கிய மொழியாகும். அமெரிக்க பல்கலைக்கழக கவுன்சில் மன்ற தலைவர் திரு GASTONG CAPERTONஉம் பெய்சிங்கில் உலக சீன மொழி மாநாட்டில் கலந்து கொண்டார். அமெரிக்காவில் 30 விழுக்காட்டு பல்கலைக்கழகங்களில் சீன மொழி வகுப்பு நடத்தப்படுகின்றது. சீன-அமெரிக்க அரசுகளின் ஒத்துழைப்புடன் வளர்க்கப்பட்ட சீன மொழி கற்பிக்கும் சாப்ட் வேர் இணைய தளத்தின் மூலம் அமெரிக்க இடைநிலை மற்றும் துவக்க பள்ளிக் கூடங்களில் பரவலாகியுள்ளது என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

ராஜாராம்.............சிறப்பு மிக்க பணியில் அதாவது அமெரிக்காவின் இடைநிலை, துவக்க பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சீன மொழிக் கல்வி பற்றி பிரச்சாரம் செய்வதில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். மாணவர்கள் சீன மொழி கற்க உதவி செய்கின்றோம். சீன-அமெரிக்கத் தொடர்பை அதிகரிக்கும் பாலம் நிறுவ நான் விரும்புகின்றேன்.

கலை..............மேற்கூறிய தகவலை கேட்ட பின் உலகில் சீன மொழி கற்பிக்கும் நிலைமை அறிந்து கொள்ளலாம். தற்போது பல்வகை வழிமுறைகளின் மூலம் 3 கோடி மக்கள் சீன மொழி கற்றுக் கொண்டுள்ளனர்.

ராஜாராம்......சீன மொழி கற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகளில் சீன மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை நிறைவு செய்யும் வகையில் சீனா பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. எடுத்துகாட்டாக வெளிநாட்டு சீன மொழி கற்பிக்கும் தலைமை குழுவை நிறுவியுள்ளது. வெளிநாடுகளில் சீன மொழி கற்பிக்கும் பணிக்கு அக்குழு பொறுப்பு ஏற்கின்றது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்துள்ளது. பாட நூலை தொகுத்து வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. சீன மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் அதிகரித்துள்ளது. இந்த வகையில் ஆசிரியச் தொண்டர்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தவிர, உலகில் பல்வேறு இடங்களில் 27 கன்பியூசியல்ஸ் கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது பற்றி உலக சீன மொழி மாநாட்டுத் தலைவரும் சீன அரசவை உறுப்பினருமான சன் ச்சு லி அம்மையார் கூறியதாவது

கலை................எதிர்காலத்தில் முன்னெப்போதும் போல நல்லெண்ணத்துடன் சீன மொழி கற்பிக்கும் துறையில் ஒத்துழைப்பை பல்வேறு நாடுகளுடன் வலுப்படுத்துவோம். தேவைப்படும் நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் உதவி வழங்குவோம். சீன மொழி கல்வியில் முதலீட்டை அதிகரிப்போம். சேவை உணர்வை தொடர்ந்து அதிகரித்து வெளிநாட்டு சீன மொழி கல்விக்கு சிறந்த பயன் தரும் சேவை புரிவோம் என்றார் அவர்.