• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-16 15:27:51    
மீன் வறுவல்

cri

ராஜாராம்—கலைமகள், சமீபத்தில் நம்ம சீனவானொலி உணவு விடுதியில் விருந்து சாப்பிட்டோமே, நினைவிருக்கா?

கலைமகள்—எப்போ?

ராஜாராம்—மறந்து போச்சா?என்னோட திருமண நாளுக்காக தமிழ்ப்பிரிவில் இருந்து எல்லோரும் போய் சாப்பிட்டோம்.

கலைமகள்—ஆமா...

ராஜா—அப்போ, ஒரு மீன் கறி பரிமாறுனாங்க. தக்காளி சாஸில் நீச்சல் அடிச்சக்கிட்டு வருகிற மாதிரி. ஒரு மீன் தட்டுல கொண்டு வந்து வச்சாங்க. பார்க்கிறதுக்கு அணில் போல இருந்தது. அது என்ன மீன்?

கலை—ஓ!அதுவா?அதற்குப் பெயர் SONG SHU GUI YU இனிப்பும் புளிப்பும் கலந்த அணில் வடிவ மான்டரின் மீன் என்பார்கள்.

ராஜா—அப்படியா?இது பற்றி ஒரு கதை கேள்விப்பட்டேன். உண்மையில், கதை இல்லை. வரலாற்றில் நடந்த சம்பவம், சொல்லட்டுமா?

கலை—சொல்லுங்க. நேயர்களுக்கு கதை என்றால் ரொம்ப விருப்பம்.

ராஜா—ஒரு முறை, QIAN LONG சக்கரவர்த்தி யாங்சேள நகரிலுள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்க்கப் போயிருந்தார். அப்போது பசிக்கவே அங்கிருந்த SONG HE உணவு விடுதிக்குள் நுழைந்தார். அங்கே சாமிபடத்துக்கு முன்னால் ஒரு அழகான மீன் படைக்கப்பட்டிருந்தது. உடனே, "எனக்கு இந்த மீன் தான் வேணும்னு"பிடிவாதம் பிடிக்காரு, அந்தக் காலத்தில் சாமிக்கு படையலா வச்ச உணவுப் பொருளை பரிமாற மாட்டாங்க. ஆனால், கேட்பதோ சக்கரவர்த்தி, என்ன செய்வது?உணவு விடுதி உரிமையாளர் சமையலறைக்குப் போய் சொன்னார். அங்கு இருந்த தலைமை சமையல் காரர், "கவலையை விடுங்க, முதலாளி, நான் பார்த்துக் கிடுதேன்"என்று சொல்லிவிட்டு, அதே மீன் போல இருந்த இன்னொரு மீனை எடுத்து, அதனுடைய தலை அணில் போல இருக்கிற மாதிரி சமைச்சி பரிமாறுனார். மீன் நல்ல வாசனையா, அதனுடைய தோல் மொரமொரப்பாவும், மாமிசம் மிருதுவா மாவு போலவும் இருந்தது. சக்கரவர்த்திக்கு ஒரே மகிழ்ச்சி, அதற்கப்புறம், அந்த மீன் வகையும், உணவு விடுதியும் ரொம்ப பிரபலமாயிருச்சி, சக்கரவர்த்தி எல்லா விருந்துகளிலும் அந்த மீன்தான் பரிமாறனும் உத்தரவு போட்டுட்டார். சரி, கலைமகள், இந்த SONG SHU GUIYU மீன் எப்படி சமைக்கிறது. சொல்ல முடியுமா?

கலை—சரி, சொல்றேன். முதலில், தேவைப்படும் பொருட்கள், நேயர்களே, குறித்துக் கொள்ளுங்கள். முதலில், ஒரு மான்டரின் மீன், 750 கிராம் எடை.

ராஜா—இது நம்ம உரில் கிடைக்காது. அதனால் கடலோரப் பகுதியில் வசிக்கின்ற நேயர்கள் அகலமான மீன் ஏதாவது எடுக்கலாம்.

கலை—சரி, அப்புறம், 20 கிராம் வெங்காயம், பிறகு, 20 கிராம் உலர்ந்த காளான், இதை தண்ணீரில் ஊற வைக்கணும்.

20 கிராம் மூங்கில் குருத்து-உரிச்சு தண்ணீரில் ஊற வைக்கணும்.

15 கிராம் கேரட், 15 கிராம் பச்சைப்பட்டாணி—வேக வைத்தது.

100 கிராம் தக்காளி சாஸ்

15 கிராம் சமையல் மது—இது கிடைக்காவிட்டால் பரவாய் இல்லை. தண்ணீர், உப்பு, கொஞ்சம் சர்க்கரை, வினிகர், நல்லெண்ணெய்.

50 கிராம் உலர்ந்த சோளமாவு

முட்டைக் கரு, 15 கிராம் மாவு.

ராஜா—சரி, இதை நான் திரும்பச்சொல்லட்டுமா. சரி, இனி தயாரிப்பு முறை சொல்லுங்க.

கலை—மீனை சுத்தப்படுத்தி, செதில்களை சொரண்டி எடுக்கணும். மீசை, செவுள் எல்லாம் வெட்டி எடுக்கணும். அப்புறம் மீன் தலையை, அது வாயை பிளந்து கொண்டு இருக்கிற மாதிரி சரிபாதியா. வெட்டணும். பிறகு, அதனுடைய முதுகெலும்பு முள்ளை நேரா வெட்டித்திறந்து, வால்பகுதியை மட்டும் வெட்டாமல் விட்டு விடணும். முதுகெலும்பு முள்ளையும் பக்க வாட்டு முன்களையும் எடுத்து விடணும். பிறகு மீனின் உடலை குறுக்கும் நெடுக்குமாக வெட்டி திறக்கணும். அதாவது, மீன் வடிவம் மாறக் கூடாது. வெட்டி திறந்த நிலையிலேயே இருக்கணும். துண்டு துண்டாக்கி விடக் கூடாது. அதன் பிறகு மீனின் தலையிலும் உடம்பு சதையிலும் உப்பு, சமையல் மதுதடவும் தடவணும் வெங்காயம் காளான், மூங்கில் இருத்து, கேரட் ஆவியவற்றைத் தனியாக கலந்து வைக்கணும்.

இனி, வாணலியில் எண்ணெய் விட்டு சூடுசெய்யணும். மீனின் தலை மற்றும் உடம்பு மீது மாவையும், முட்டைக்கருவையும் தடவணும். பிறகு சூடான எண்ணெயில் மீனை போட்டு, பொன்னிறமாக ஆகும். வரை பொரிக்கணும். அதை ஒரு தட்டில் எடுத்துவைங்க. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் இருக்கட்டும். அதில் தக்காளி சாஸ், வெங்காயம், காளான், மூங்கில் குருத்து, கேரட், பச்சைப் பட்டாணி எல்லாவற்றையும் போட்டு கிளறி விட்டு, வதக்கணும். பிறகு, அதில் கொஞ்சம் சமையல் மது தண்ணிர் உப்பு, சர்க்கரை போட்டு, சாஸ் கொதிக்கிற போது, சோளமாவு போட்டு கெட்டியாக்கணும். அது மேலே நல்லெண்ணெயை தெளிச்சி. அந்த சாஸை மீன் மேலே ஊற்றி பரிமாறுங்க. மீன் மொரமொரப்பா சுவையா இருக்கும்.