தேங்யூவா என்பவர், சீனாவின் புகழ்பெற்ற உச்சகுரலிசை பாடகி. அவர் பாடிய பல பாடல்கள் சீனாவில் பிரபலமாக விளங்கி, மக்களின் மனதில் ஆழப்பதிந்து நினைவில் நிலைத்து நிற்கின்றன.
நட்புறவு எனும் பாடலைப் பயன்படுத்தி, அவர் புகழ்பெற்றார். சீன மக்கள் பலர் அவரை நினைக்கின்றனர். இப்பொழுது 62 வயதான தேங்யூவா, ஓய்வு எடுக்கிறார். பெய்ஜிங்கின் புறநகரப்பகுதியில் ஒரு கலை பள்ளியைத் திறந்துள்ளார். அண்மையில், எமது செய்தியாளர், இந்தப் பள்ளியில் அவரைப் பேட்டி கண்டார்.
தேங்யூவாவைப் பார்க்கும் போது, அவர் மாணவர்களுக்குப் பாடத்தைக் கற்பித்துக்கொண்டிருந்தார். பாடத்துக்குப் பின்பு, செய்தியாளரிடம் பேசுகையில், அவர், தாம் சிறு வயதிலிருந்தே பாட்டு பாடுவதைக் கற்றுக்கொண்ட கதையை கூறினார். அப்போதைய தேங்யூவாக்கு, ஆடலும் பாடலும் பிடித்திருந்தது. படுக்கையில் நின்று, ஆடிப்பாடினார். அவர் கூறியதாவது:
10 வயதில் இருந்தே நான் பாட்டுக் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். குழந்தைக் காலத்திலேயே இசையை விரும்பியதால், வானொலி நிலையம் ஒலிப்பரப்பும் சில இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு மிகழ்ந்தேன். குழந்தை கூட்டிசைக் குழு பாடிய பாடலைக் கேட்ட பிறகு, மன விருப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், குழந்தைக் கூட்டிசைக் குழுவின் ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன் என்றார் அவர்.
எனவே, இந்தக் கூட்டிசைக் குழுவின் ஆசிரியர் அனுப்பிய கடிதத்தில் உள்ள முகவரியின் படி, அவருடைய பள்ளிக்குச் சென்றார். தேங்யூவா, தலைச்சிறந்த மதிப்பெண்ணுடன், சீன குழந்தை ஒலிப்பரப்பு கூட்டிசைக் குழுவில் சேர்ந்தார். முறைப்படி இசை கல்வி பெற்று, தனிப்பாடலைப் பாடி, தனது திறமையை வெளிப்படுத்தினார்.
1959ம் ஆண்டில், அவர் இடைநிலைப்பள்ளியில் படித்துத் தேறினார். அவர் தொடர்ந்து படித்து, எதிர்காலத்தில் ஒரு இசை ஆசிரியராக வேலை செய்ய விரும்பினார். ஆனால் குடும்பத்தின் சுமையைக் குறைக்க, நடிகையாக வேண்டும் என்று அவர் இறுதியாக முடிவு எடுத்தார். சீன நிலக்கரித் துறையின் கலைக்குழு, அவர் தேர்ந்தெடுத்த முதலாவது சிறப்பு கலைக் குழு ஆகும். இக்கலைக்குழுவில் சேர்ந்த அவர், தனிப்பாடல் பாடும் இளம் பாடகியாக மாறினார். இந்தக்கலைக் குழுவில், சிறப்பு ஆசிரியரிடம் கற்றுக்கொண்டதால், தேங்யூவாவின் பாடும் தரம், வேகமாக உயர்ந்தது. அவர் பாடிய சுரங்க விளக்கு பாடல், மலையில் சுற்றுலா பயணம் முதலிய பாடல்கள், நேயர்களின் வரவேற்பைப் பெற்றன. நட்புறவு எனும் பாடலால், அவர் புகழ்பெறத் துவங்கினார்.
இந்தப் பாடல், கிழக்கில் சூரியன் உதிக்கிறது எனும் பெரிய ரக இசை மற்றும் ஆடல் வரலாற்று கவிதையில் ஒரு பகுதியாகும். நவ சீனா நிறுவப்பட்ட 15ம் ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு, 1964ம் ஆண்டில், சீனாவின் கலைப் பணியாளர்கள், இந்த அளவு மிக்க இசை நிகழ்ச்சியை இயற்றினர். இந்த நிகழ்ச்சியில் தேங்யூவா உள்ளிட்ட சீனாவின் தலைச்சிறந்த கலைஞர்கள் சேர்ந்தனர்.
|