யாங் சு ஆற்று மூன்று மலை பள்ளத்தாக்கு மின்சார உற்பத்தி
cri
சீன யாங் சு ஆற்று மூன்று மலை பள்ளத்தாக்கு அணையின் இடது கரை மின்நிலையத்தின் 7 லட்சம் கிலோவாட் திறனுடைய 14 மின்னாக்கிகள் இன்று மின் உற்பத்தி செய்யத் துவங்கின. குறிப்பிட்டகாலத்திற்கு ஓராண்டு முன்னதாகவே இத்திட்டப்பணி நிறைவு பெற்றது. இடது கரை மின்நிலையம் கட்டிமுடிக்கப்பட்ட பின், தற்போது, இப்பள்ளத்தாக்கில் மின்நிலையத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் உலகில் மூன்றும் இடம் வகிக்கின்றது. இடது கரை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் தொடக்க விழாவில் சீனத் துணை தலைமை அமைச்சர் செங் பே இ கலந்து கொண்டார். மூன்று மலை பள்ளத்தாக்குத் திட்டப்பணி தங்குதடையின்றி நிறைவேறியிருப்பது, சீனாவின் மின்சார விநியோகத்துக்கு முக்கிய பங்காற்றும் என்று அவர் கூறினார். யாங் சு ஆற்று மூன்று மலை பள்ளத்தாக்கு அணைத்திட்டத்தில் தரம் மற்றும் பாதுகாப்புக்கு முனனுரிமை தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
|
|