• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-20 09:08:47    
சீன மேசை பந்து ஒப்பன் போட்டி

cri

செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் சீன மேசை பந்து ஒப்பன் போட்டி இரண்டாம் நாளாக நடைபெற்றது. சீன ஹாங்காங் அணியின் வீராங்கனை லின் லிங் 4-2 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை லீ ஜியா வெயைத் தோற்கடித்து அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிப் பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் திங்களில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியை அடுத்து லீ ஜியா வெய்யை அவர் தோற்கடிப்பது இது இரண்டாம் முறையாகும். இன்று நான் நன்றாக விளையாடவில்லை. மிகவும் கடுமையாக போராடினேன், கடந்த முறையில் நான் அவரைத் தோற்கடித்ததில் அவ்வளவு கஷ்டமில்லை. இன்றைய போட்டியின் பிற்பாதியில் உடல் கலைப்பாக இருப்பது போல் உணர்ந்தேன். மிகவும் கஷ்டப்பட்டு போராடியதால் இந்த வெற்றி எனக்கு கிடைத்தது என்று போட்டி நிறைவடைந்த பின் லின் லிங் கூறினார்.

ஹாங்காங்கின் மற்றொரு வீராங்கனை லியூ சி பெய் சீன வீராங்கனை கோ யேயிடம் தோல்வி கண்டு, கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் 4-3 என்ற செட் கணக்கில் கோ யேவைத் தோற்கடித்திருந்த போதிலும், அரை திங்களுக்குப் பின், கோ யே 4-1 என்ற செட் கணக்கில் அவரைத் தோற்கடித்தார்.

17ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற போட்டியில் சீன ஹாங்காங் அணியின் தியே யா நா, சாங் ழுய் ஜோடி 2-4 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் சுன் பெய் பெய், வாங் யே கு ஜோடியிடம் தோல்வி கண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி இழந்தது. சீன ஹாங்காங் அணியின் வீரரான கௌ லி செ 1-4 என்ற செட் கணக்கில் சீன வீரர் லியூ கோ செங்கிடம் தோல்வி கண்டார்.

சீன ஹாங்காங் அணியின் வீராங்கனையான லின் லிங் மட்டும் போட்டியிலிருந்து விலக்கப்படவில்லை. 18ஆம் நாள் மகளிருக்கான ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் சீன அணியின் லீ சியோ சியாவுடன் அவர் மோதுவார். இந்த போட்டியை பொறுத்து, எனக்கு அதிக கவலையில் என்று அவர் கூறினார். ஆனால், இது ஒரு கடுமையான போராட்டம் என்று அவருக்கு நன்கு தெரியும். சீன வீராங்கனைகளான சாங் யி நிங்கும், கோ யேயும் அரையிறுதிப் போட்டியில் சந்திப்பர்.