• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-22 22:06:19    
சீன மேசைப் பந்து ஒப்பன் போட்டியில் சீன அணி

cri

செப்டம்பர் திங்களின் துவக்கத்தில் சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்ற பரிசு போட்டிக்குப் பின், சீனாவின் சென்சென் நகரில் நிறைவடைந்த சீன மேசை பந்து ஒப்பன் போட்டியில் சீனா அணி மீண்டும் நான்கு நிகழ்ச்சிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. சீன வீரர் வாங் லி ச்சின் ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆடவருக்கான ஒற்றையர் அரை இறுதிப் போட்டிகள் சீன வீரர்களுக்கிடையில் நடைபெற்றன. அரை இறுதிப் போட்டியில் சீன வீரர் வாங் லி ச்சின் 4-2 என்ற செட் கணக்கில் சீன வீரர் சென் ச்சியைத் தோற்கடித்தார். சீன வீரர் வாங் ஹௌ 4-0 என்ற செட் கணக்கில் சீனாவின் இளம் வீரர் மாலுங்கைத் தோற்கடித்தார்.

இறுதிப் போட்டி துவங்கிய பின், வாங் லி ச்சின் மிக விரைவில் போட்டியிடும் நிலையில் நுழைந்தார். முதல் மூன்று ஆட்டங்களில் அவர் எளிதாக வெற்றி பெற்றார். நான்காம் ஆட்டத்தில் வாங் ஹௌ சாதகமற்ற நிலையை மாற்றி வெற்றி பெற்றார். ஆனால் 5ஆம் ஆட்டத்தில் வாங் லி ச்சின் வாங் ஹௌவுக்கு வாய்ப்பை வழங்கவில்லை. ஐந்தாம் ஆட்டத்தில் அவர் விரைவில் 12-10 என்ற புள்ளியுடன் வாங் ஹௌவைத் தோற்கடித்தார்.

மகளிருக்கான ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் புகழ் பெற்ற வீராங்கனை சாங் யி நிங், தனது அணி தோழியான கோ யேயிடம் தோல்வி கண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி இழந்துவிட்டார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் சீன இளம் வீராங்கனை லீ சியோ சியா சிறப்பாக விளையாடினார். 4-1 என்ற செட் கணக்கில் சீன ஹாங்காங்கின் லின் லிங்கைத் தோற்கடித்தார். இறுதிப் போட்டியில், லீ சியோ சியா முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலைமையில், அமுக்கத்தை எதிர்த்து நின்று, தொடர்ந்து நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவருக்கான இரட்டையர் போட்டி, இரண்டு சீன ஜோடிகளுக்கிடையில் நடைபெற்றது. இறுதியில் வாங் லி ச்சின் சென் ச்சி ஜோடி4-2 என்ற செட் கணக்கில் லியூ கோ செங், மா லுங் ஜோடியைத் தோற்கடித்து முதலிடம் பெற்றது. மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சாங் யி நிங், கோ யே ஜோடி, மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர்கள் 4-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் சுன் பெய் பெய், வாங் யுயே கூ ஜோடியைத் தோற்கடித்து இலேசாக சாம்பியன் பட்டம் வென்றனர்.