• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-20 14:00:11    
கோடைகாலத்தில் சிகிச்சை

cri
வணக்கம் நேயர்களே. இப்போது நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம். இன்றை நிகழ்ச்சியில் குளிர் காலத்தில் தொற்றும் நோய்களுக்கு கோடைகாலத்தில் சிகிச்சை அளிப்பது பற்றிய உரையாடல். பங்கெடுப்பவர்கள் ராஜாராம், கலையரசி.

ராஜா......நான் இந்தியாவிலே சீன பாரம்பரிய மருத்துவ முறையாந மூலிகை மருத்துவம் பற்றி கேள்விப்பட்டேன். நோய்களுக்கு குறிப்பாக குளிர் காலத்தில் தொற்றும் நோய்களுக்கு கோடைகாலத்தில் சிகிச்சை செய்யும் முறை மக்களின் கவனத்தை ஈராப்பதாக உள்ளது. இது பற்றி கலை நீங்கள் இன்றைய நிகழ்ச்சியில் விளக்கி கூறலாமா?

கலை......கண்டிப்பாக. இத்தகைய சிகிச்சை முறை எங்கள் நாட்டின் மூலிகை மருத்துவத் தத்துவத்தின் படி கையாளப்படும் சிகிச்சை முறையாகும். சீன மரபுவழி மருத்துவத்தில் மனித உடம்பில் இன் யன் என்ற இரண்டு வகை உயிர் ஆதாரங்கள் உள்ளன. இவ்விண்டும் சம நிலையில் உடம்பில் இயங்கும் போது தான், உடம்பு ஆரோக்கியமான நிலையில் இருக்க முடியும். கோடைகாலத்தில் யன் ஓட்டம் வலிமைமிக்கது. குளிர்காலத்தில் யின் ஓட்டம் அதிகமாக உள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களில் சில கோடைகாலத்தில் யன் ஓட்டம் வலிமையாகும் நிலையில் தளர்ச்சியடையலாம். கோடைகாலத்தில் உடம்பில் நிறைந்த யன் ஓட்ட வாய்ப்பினை கொண்டு மருந்து மூலம் உடம்பில் இன் யன் இரண்டு வகை உயிர் துடிப்புக்களை சமப்படுத்தினால் உடம்பின் ஆரோக்கியம் சீரடைந்து விடும். தவிரவும், கோடைகாலத்தில் வெப்பமாக இருப்பதால் வியர்வை அதிகமாக வெளியேறுகின்றது. பல்வேறு உடம்புப் புள்ளிகள் கூர்மையான உணர்வில் உள்ளன. இந்த தருணத்தை தெரிவு செய்து அக்குபஞ்சர் செய்து அல்லது மூலிகை மருந்தை காயத்தில் தடவினால் மருந்தை உடம்பு நன்றாக ஏற்றுக் கொள்ளும். பெய்சிங் குங் ஆன் மன் சீன மரபுவழி மருத்துவ மனையின் மூச்சு குழாய் துறைத் தலைவர் லீ கோ சிங் டாகடர் இது பற்றி கூறுகிறார்.

 ராஜா............குளிர்காலத்தில் பீடித்த நோய்க்கு கோடை காலத்தில் சிகிச்சை அளித்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக இத்தகை நோய் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் குளிர்காலத்தில் மீண்டும் ஏற்படக் கூடிய வீதம் 80 விழுக்காடு குறையும் என்றார். டாக்டர் லீ சொன்னதை நான் நம்புகின்றேன்.

கலை......அது பற்றி நீங்கள் சொல்லுங்கள்.

ராஜா......சொல்கிறேன். சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி கோடைகாலத்தில் 27 நாட்கள் மிகவும் கடுமையான வெப்பம் ுடையவை. குளிர் காலத்தில் மிக கடும் குளிர் நாட்களின் எண்ணிக்கையும் 27 தான். இந்த காலத்தில் சிகிச்சை செய்தால் ஒவ்வொரு முறையும் 7 நாள் முதல் 10 நாட்களாவது நீடிக்க வேண்டும். இத்தகைய மருத்துவ சிகிச்சை 3 ஆண்டுகளாக தொடர்ந்து தரப்பட வேண்டும். நோய் மாறுவதற்கு ஏற்ப சிகிச்சை முறை மாற்ற வேண்டும். இந்த முறையில் மூலிகை மருந்தை உடம்பின் மேல் தடவுவது, அக்குபஞ்சர் ஊசி குத்துவது என்பது முக்கியமாக கையாளப்படும். இது தவிர எனக்கு தெரிந்தது மேலும் ஒன்று உண்டு. அதாவது சில மருந்துகளை தேவைப்படும் போது உட்கொள்ளலாம். அப்படிதானே.

கலை.........உங்களுக்கு தெரிந்த விஷயம் சரியானது. சொன்னதும் முழுமையாக சரியானது. உதாரமமாகச் சொன்னால் இருமல் நோய் பற்றி விளக்கி கூறலாம். இருமல் நோய் வாழ்க்கையில் மூச்சு குழாய் நோயாகும். நோயாளி உடம்புக்கு அப்பால் வரும் அழுத்தம் காய்ச்சல், குளிர் காற்று ஆகியவற்றின் காரணமாக மூச்சு குழாயில் அழற்சி, வீக்கம் போன்றவை நிகழும். இதந் விளைவாக மூச்சுத் திணறல் உண்டாகும்.

ராஜா.....எனக்கு புரிந்தது. 40 வயதான திரு து க்க சன் இருமல் நோயினால் அல்லல்படும் நோயாளி. அவருடைய நோய் அனுபவத்தை கேளுங்கள்

எனக்கு ஜலதோஷம் வந்தால் மூச்சுவிட முடியாது. மூச்சு விடும் போது வயிறு வீங்கிவிடும். தொண்டையில் ஒரு மாதிரி பொருள் இருப்பது போல் காணப்படுகின்றது. கஷ்டமாக மூச்சுத்திணறல் சுவையின்மை, மரணமடையும் உணர்ச்சி உண்டு என்றார் அவர்.