கடந்த ஆக்ஸ்ட் திங்கள் வரை சீன திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 7300க்கும் அதிகமான கிராமங்களின் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கென, சீன நடுவண் அரசு 18 கோடி யுவானை செலவிட்டது. விசாலமான பரப்புடைய திபெத்தில் மக்கள் தொகை குறைவு. பெரும்பாலான விவசாயிகளும், இடையர்களும் வெவ்வேறு இடங்களில் சிதறி வாழ்கின்றனர். நடுவண் அரசின் பெரும் ஆதரவுடன் 1999ம் ஆண்டு முதல் திபெத்தில், "அனைத்து கிராமங்களிலும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகளை வழங்கும்" திட்டப்பணி பவலகைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
|