• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-19 16:36:53    
சீனாவின் சிங்காய் மாநிலம்

cri

உலகின் கூரை என்று சீனாவின் சிங்காய்-திபெத் பீடபூமி அழைக்கப்பட்டு வருகின்றது. இப்பூமியின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிங்காய் மாநிலத்தின் சராசரி கடல் மட்டம், மூவாயிரம் மீட்டருக்கு மேலாகும்.

இம்மாநிலத்தின் துணை தலைவர் Jiang Jie Min இது பற்றி குறிப்பிடுகையில், "நிலப்பரப்பளவு பெரியது; மூல வளம் மிகுந்தது என்பது இம்மாநிலத்தின் முக்கியத் தனிச்சிறப்பியல்பாகும்; சிங்காய் மாநிலம், சீனாவின் யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு, Lancangjiang ஆறு ஆகியவற்றின் பிறப்பிடம்; அதன் உயிரின வாழ்க்கையின் புவியியல் நிலை மிகவும் முக்கியமானது." என்றார் அவர்.

பெரிய ஆறுகளும் ஏராளமான ஏரிகளும் இம்மாநிலத்துக்கு மிகுந்த நீராற்றல் வளத்தை வழங்கிவருகின்றன. இம்மாநிலத்தில் 279 நீளமான ஆறுகளும் 178 நீர் மின் நிலையங்களும் உள்ளன. மின்சாரம் உற்பத்தி செய்யும் மொத்த ஆற்றல் சுமார் 2 கோடி கிலோவாட்டாகும். குறிப்பாக, மஞ்சள் ஆற்றின் மேல் பகுதியில் 276 கிலோமீட்டர் நீளமான ஆற்று நீர் வேகமாக ஓடுவதாலும் சிறந்த புவியியல் நிலையினாலும் நாட்டின் முக்கிய நீர்-மின் வளர்ச்சிப் பிரதேசங்களில் ஒன்றாக சிங்காய் மாநிலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயரமான மலைகள் மற்றும் ஏரிகளினால் சிங்காய் மாநிலத்தில் செழிப்பான தாதுப்பொருட்களும் உப்பு ஏரி வளங்களும் உருவாயிற்று. இது வரை இம்மாநிலத்தில் 123 வகை தாதுப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சோடியம் உப்பு, லிதியம் உப்பு, மாகனீசியம் உப்பு, கல்நார் உள்ளிட்ட 11 வகைகள் சீனாவில் முதல் இடம் வகிக்கின்றன. இவற்றில் மிக அதிகமான தாதுப்பொருட்களின் படிவு அளவு, சீனாவின் அதே வகை தாதுப்பொருட்களின் படிவு அளவில் 60 விழுக்காட்டுக்கு அதிகமாகும். தவிர, இம்மாநிலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் படிவு அளவும் மிகுந்துகிடக்கின்றது.

அதிகமான ஆறுகள், ஏரிகள், மலையிலுள்ள உறைபணி ஆகியவை, இம்மாநிலத்தின் பரந்துபட்ட நிலத்துக்கு நீர் வழங்கி வருகின்றன. இம்மாநிலத்தில் காடு, புல் வெளி, ஏரி ஆகியவை எங்கெங்கும் காணப்படுகின்றன. சீனாவின் 5 முக்கிய கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களில் ஒன்றான சிங்காய் மாநிலத்தில் பயன்படுத்தப்பட வல்ல மேய்ச்சல் தளம் 3 கோடி ஹெக்டராகும். கால்நடை வளர்ப்புத் துறை மிகவும் விறுவிறுப்பாக வளர்ச்சியடைகின்றது.