சீனத் திபெத்தியலாளரின் அறிக்கை
cri
"சீன திபெத் பண்பாட்டு வாரம்" நடவடிக்கையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிக்குழுவினர் நேற்று இத்தாலியின் Rome பல்கலைக்கழகத்தில் அறிக்கை வழங்கினர். சீன திபெத்தியல் அறிஞர்களும், வாழும் புத்தர்களும் இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், அறிஞர்கள் ஆகியோருக்கு கடந்த 50 ஆண்டுகளாக திபெத்தின் பொருளாதாரம், சமூகம், மதம், பண்பாடு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியை எடுத்துக்கூறினர். திபெத் தன்னாட்சி பிரதேசத்து சமூக அறிவியல் கழகத் தலைவரும், திபெத்தியலாளருமான Ciwang Junmei, திபெத் தன்னாட்சி பிரதேசம் பற்றி விவரித்தார். அவர் பல உண்மைகளைக் கூறி, சுமார் 50 ஆண்டுகளில், திபெத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களை நிரூபித்தார். Labu Lama திபெத் மதத்தின் தோற்றம் மற்றும் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டு மறு ஆய்வு செய்தார். திபெத்தில் உள்ள பழைய கட்டடங்களை பாதுகாப்பதிலும், குடிமக்களின் மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் செய்வதிலும் சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் எடுத்துக்கூறினார்.
|
|