வி-------வணக்கம் நேயர்களே. உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். ராஜா, இன்றைய கடிதங்களைப் பார்க்கலாமா
ரா------முதலில், தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டி சீ, பாரதி, ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம். இவர் சீனப் பண்பாடு, இன்பப் பயணம், மலர்ச்சோலை, சீன மகளிர் ஆகிய நிகழ்ச்சிகளைப் பாராட்டிவிட்டு, நேயர்களுக்கு குறிப்பாக 5 ஆண்டுகலுக்கும் மேலாக தொடர்ந்து அதிகக் கடிதம் எழுதி வரும் நேயர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடியுமா என்று கேட்கிறார்.
வி------நேயர் பாரதி தெரிவித்த யோசனைக்கு நன்றி. சீன வானொலி கோடுத்திருக்கும் நேயர் எண் மட்டுமே போது மானது என்று நினைக்கிறோம். மேலும், புகைப்பட அடையாள அட்டை வழங்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
ரா-----அடுத்து, 30 பள்ளிப்பட்டி பி ஆர் சுப்பிரமணியன் மேத்திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ள கடிதம். சீன வானொலி ஒலிபரப்பில் தமக்கு மிகவும் விரும்பமானது. அறிவியல் உலகம் நிகழ்ச்சிதான் என்று கூறிவிட்டு, அலைவரிசை மூலம் ஏற்பட்ட நட்பு என்ற செய்தித் தொகுப்பு தொடர்பாக ஒரு கருத்தைக் கூறுகிறார்.
வி------அப்படியா, என்ன கருத்து.
ரா-------சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மட்டும் செய்யவில்லை. தமிழர்களை தமிழ் நேயர்கள் அளவைரையும் ஒன்றிணைத்துவிட்டது. நேயர் கருத்தரங்கு மூலம் தெரியாத முகங்களைத் தெரிய வைத்தது சீன வானொலி என்கிறார்.
வி------நேயரின் பாராட்டுக்கு நன்றி. நேயர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கருத்தரங்கில் சந்திப்பதோடு நின்று விடாமல் அடிக்கடி தங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரி ராஜா, அடுத்த கடிதம்.
ரா--------- திருச்சி மாவட்டம் குருவம்பட்டி நேயர் பி தாண்டவன் பல நிகழ்ச்சிகளைப் பாராட்டி விட்டு, உரையாடல் மூலம் சீன உணவு அரங்கம் ஒலிபரப்பாவது பல நேயர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்கிறார். மீனாட்சி பாளையம் கா அருண் ஜூன், ஜூலை திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம் ஜுன் 27 உணவு அரங்கம் சற்று வித்தியாசமாக குறுங் கதையோடு ஒலிபரப்பானது சிறப்பு, ஜுலை முல் நாள் உங்கள் குரல் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட மன்றக் கூட்டத்தில் கலைவாணன், வேலுசாமி, காசிராஜன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள் என்கிறார். கரியபட்டினம் நேயர் வி ஆர் புஷ்பராஜன் தனக்குப் பிடித்த நிகழ்ச்சி சீனக்கதை என்று கூறிவிட்டு திருச்சி அண்ணா நகர் விடி ரவிச்சந்திரன் தமது சீனப் பயணம் பற்ரஇக் கூறியதைக் கேட்டபோது, நானும் பெய்சிங் சென்று வந்தது போன்ற உணவு ஏற்பட்டது என்று பாராட்டியுள்ளார். கோயம் புத்தூர் பீளமேடு நேயர் பெ சிவாஜி தமிழ்த்திரைப்பாடல்கள் அன்றஉம் இன்றும் என்பது போன்ற நிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாமே என்று யோசனை கூறுகிறார்.
வி------நேயர்களின் பாராட்டுக்கும் யோசனைக்கும் நன்றி.
|