
திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவை  ஒட்டி ரஷிய அறிவியல் கழகத்தின் தொலை தூர கிழக்கு ஆய்வகம் நேற்று மாஸ்கோவில் கல்வியியல் கருத்தரங்கு நடத்தியது. கருத்தரங்கில் பேசிய ரஷிய அறிஞர்கள்திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டது அதன் வரலாற்றில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றனர். இதனால் அரசியல், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில் திபெத் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை வளர்த்து பாரம்பரிய பண்பாட்டை பாதுகாப்பதில் சீனாவின் அனுபவத்தில் இருந்து ரஷியா கற்க வேண்டும் என்று ரஷிய-சீன நட்பு சங்கத்தின் தலைவரும் தொலைதூர கிழக்கு ஆய்வகத்தின் தலைவருமான தித்தாரங்க்கோ தம் உரையில் குறிப்பிட்டார்.30க்கும் அதிகமான ரஷிய சீன மொழி அறிஞர்களும் திபெத்தியல் அறிஞர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
|