|
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்பு கமிட்டி
cri
|
 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி செய்தி சேகரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு சிறந்த, வசதிகளும் உயர்தரமான சேவைகளும் செய்து தரப்படும் என்று பெய்சிங் மாநகரக் கட்சிக் கமிட்டி செயலாளரும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்பு கமிட்டித் தலைவருமான லியூ ச்சி இன்று பெய்சிங்கில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்கும் செய்தியாளர்களுக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்வது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி செய்தி சேகரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், சலுகை பெறும் வணிகர்களும், வெளிநாடுகளின் இதர செய்தியாளர்களும், போட்டி துவங்குவதற்கு முன் பல முறை சீனாவுக்கு வந்து செய்வதற்கு வசதி வழங்குவது முதலியன இந்த சேவைகளில் அடங்கும்.
|
|