• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-27 11:30:57    
சீன டென்னிஸ் ஒப்பன் போட்டி

cri

செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் சீன டென்னிஸ் ஒப்பன் போட்டி களத்திலிருந்து வரும் நல்ல தகவல் குறைவு. பெரிய விலியம்ஸ் கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். சீன அணியின் பொங் சுவை, சுன் தியன் தியன் தோல்வி கண்டு அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி இழந்துவிட்டனர். ஒலிம்பிக் சாம்பியனான சுன் தியன் தியன், லீ திங் ஜோடி மகளிருக்கான இரட்டையர் போட்டியில் மிக கஷ்டமான நிலையை சமாளித்த பிறகு தான் வெற்றி பெற்றது.

மகளிருக்கான ஒற்றையர் போட்டியில், கடந்த சுற்றில் சிறிய விலியம்ஸைத் தோற்கடித்த சீன வீராங்கனை சுன் தியன் தியன் 23ஆம் நாள் திறமையுடன் விளையாடவில்லை. அவர் 0-2 என்று செட் கணக்கில் ரஷியாவின் ஜிரிலியன்கோவிடம் தோல்வி கண்டு அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி இழந்துவிட்டார்.

ஆசியாவில் முதலிடம் பெற்ற சீன வீராங்கனை பெங் சுவையும் 0-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் புதிய வீராங்கனை கிரோபெல்டிடம் தோல்வி கண்டார். ரஷியாவின் புகழ்பெற்ற வீராங்கனை ஷாராபோவா 2-0 என்ற செட் கணக்கில் ஜப்பானிய வீராங்கனையை எளிதாக தோற்கடித்தார். துவக்கத்தில் அவர் போட்டி நிலையில் இருக்கவில்லை.

ஆனால் பின்னர் அவர் தன்னை சரிப்படுத்தினார். அரை இறுதிப் போட்டியில் அவர் ஜிரிலியன்கோவை எதிர்த்து விளையாடுவார். பெரிய விலியம்ஸ் போட்டியிலிருந்து விலகியதால், அவருக்கும் ஷாராபோவாவுக்குமிடையே நடைபெறும் போட்டியை பார்க்க விரும்புவோர் மிகவும் ஏமாற்றமைடந்துள்ளனர்.

இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகளான லியூ வான் திங், சுன் செங் நான் ஜோடி அனுபவம் இல்லாததால் 1-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் லைக்ஸ் ட்ராவிவிஸ், வெனிஜூவிலாவின் காபாச்சி ஜோடியிடம் தோல்வி கண்டது.

சீன வீராங்கனைகளான லீ திங், சுன் தியன் தியன் ஜோடி 2-1 என்ற செட் கணக்கில் ரஷியாவின் துச்சியே வினா, தென்னாப்பிரிக்காவின் கோலன்திங் ஜோடியைத் தோற்கடித்தது. இதுவரை, சீன அணியின் இரண்டு ஜோடிகள் அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன.