• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-29 08:56:46    
ஐரோப்பிய கூடைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி

cri

34வது ஐரோப்பிய கூடைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் பெல்கிரேட்டில் தொடர்ந்து நடந்தது. இரண்டு கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முந்திய நால் கிரேக்க மற்றும் பிரெஞ்சு அணிகள் வெற்றி பெற்றதையடுத்து, ஜெர்மன் மற்றும் ஸ்பெயின் அணிகளும் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன.

அன்று முதலாவது போட்டி, ஜெர்மனிக்கும் ஸ்லொவென்னியாவுக்கும் இடையில் நடந்தது. ஸ்லொவென்னிய அணி பிரிவுப் போட்டியில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி என்ற சிறந்த சாதனையுடன் நேரடியாக கால் இறுதிப் போட்டியில் நுழைந்தது. எனவே 23ஆம் நாளன்று சுமார் பத்தாயிரம் கூடைப் பந்து வெறியர்கள் பெல்கிரேட்டில் நுழைந்தனர்.

ஆனால் அன்று இரவு ஸ்லொவென்னிய அணி நன்றாக விளையாடவில்லை. ஆர்வம் மிகுந்த இந்த கூடைப்பந்து வெறியர்கள் மிகவும் ஏமாற்றமடைவதாக உணர்ந்தனர். இப்பொட்டியில் ஜெர்மன் அணி திறமையுடன் விளையாடி இறுதியில் 76-62 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்லொவென்னியாவைத் தோற்கடித்து அரை இறுதியில் கலந்துகொள்ள தகுதி பெற்றது.

கடந்த முறை சாம்பியன் பட்டப் போட்டியில் இரண்டாம் இடம்பெற்ற ஸ்பெயின் அணிக்கும் கிரோஷிய அணிக்குமிடையில் நடைபெற்ற பந்தயம் மிகவும் உக்கிரமாக இரந்தது. முதல் இரண்டு பகுதி நேரங்களில் கிரோஷிய அணி முன்னணியில் இருந்தது. பிந்திய இரண்டு பகுதி நேரங்களில் இரண்டு அணிகள் மாறிமாறி முன்னணியில் இருந்தன. போட்டி நிறைவடைவதற்கு முந்திய சில வினாடியிலும் கிரோஷிய அணி மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தது.

ஆனால் இந்த அணி தனது சிறந்த நிலையை நிலைநாட்டவில்லை. இறுதியில் கிரோஷிய அணி 85-101 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது மிகவும் வருந்ததக்கது. இந்த சாம்பியன் பட்டப் போட்டி செப்டம்பர் 15ஆம் நாள் செல்வியாவின் தலைநகரான பெல்கிரேட்டில் துவங்கியது 16 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டன.