இவ்வாண்டு முழுவதிலும், தானிய விளைச்சல் அதிகரிக்கும் என்ற இலக்கை சீனா நனவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, எமது செய்தியாளர் சீன வேளாண் அமைச்சகத்தின் கூட்டம் ஒன்றிலிருந்து இதை தெரிவித்தார். இவ்வாண்டு, சீனாவில் தானிய விளைச்சல் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அதிகரிக்கும். உள்நாட்டில் தானியத்தின் விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான முரண்பாட்டை இது பெரிதும் தணிவடையச் செய்யும். தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கை ஆற்றும் என்று துணை வேளாண் அமைச்சர் Fan Xiao Jian அறிமுகப்படுத்தினார். சீனா, உலகில் தானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றில் ஒரு பெரிய நாடு, தானியம் பயிரிடப்படும் நிலப்பரப்பு, உலகின் மொத்த பரப்பில் இருபது விழுக்காட்டுக்கு மேலானது. கடந்த ஆணடு, சீனாவின் தானிய விளைச்சல், சுமார் 47 ஆயிரம் கோடி கிலோகிராம் ஆகும்.
|