இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில், 7 கோடியே 90 லட்சத்துக்கு அதிகமான அந்நிய பயணிகள் சீனாவுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, சுமார் 13 விழுக்காடு அதிகமாகும். சுற்றுலா மூல அந்நிய செலாவணி மொத்தம், 1950 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. எமது செய்தியாளர் இன்று சீன தேசிய சுற்றுலா பணியகத்திலிருந்து இச்செய்தியை அறிவித்தார். தற்போது, உலகில் சுற்றுலா வல்லரசு நாடாக சீனா மாறியுள்ளது. 2004ம் ஆண்டில், சீனாவுக்கு வந்த அந்நிய பயணிகளின் எண்ணிக்கை, உலகில் நான்காம் இடமும், அந்நிய செலாவணி வருமானம் 7ம் இடமும் வகிக்கின்றன.
|