• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-26 21:49:05    
உலகின் கூரையில் அமைந்துள்ள சிங்காய் மாநிலம்

cri

துவு இன மக்கள்

சிங்காய் மாநிலத்தில் அதிக இயற்கைக் காட்சித் தளங்கள் இருக்கும் அதே வேளையில் வரலாற்றுச் சிறப்பிடங்களும் பலவிதமானவை. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட சிங்காய் மாநிலத்தில் ஹன் இனம் தவிர, திபெத், மங்கோலிய, வெய், துவு, சரா இனங்கள் உள்ளிட்ட 43 சிறுபான்மை தேசிய இனங்கள் உள்ளன. இவ்வினங்களில் துவு இனமும் சரா இனமும் சிங்காய் மாநிலத்தில் மட்டும் உள்ளன. தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த கட்டடங்கள் மற்றும் உடைகளை அங்கு கண்டுகளிக்கலாம்; அத்துடன், வேறுபட்ட தேசிய இன மக்களின் அறு சுவை உணவு வகைகளையும் சுவைத்துப் பார்க்கலாம்.

சரா இன மக்கள்

தற்போது இம்மாநிலத்தில் மின்னாற்றல் தொழிற்துறை, உப்பு. ஏரி வேதியியல் தொழிற்துறை, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொழிற்துறை, இரும்பற்ற உலோகத்தொழிற்துறை ஆகிய 4 முதுகெலும்புத் துறைகளும் உலோகத்துறை, கட்டடப் பொருள், மருத்துவம் மற்றும் மருந்தாக்கம், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பொருட்களின் பதனீடு ஆகிய 4 மேம்பாட்டுத் தொழில்களும் துவக்க நிலையில் உருவாகியுள்ளன.

இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டம் பற்றி Jiang Jie Min கூறியதாவது

"அடுத்த 5 ஆண்டுகளில், முதுகெலும்புத் தொழிற்துறையையும் மேம்பாட்டுடன் கூடிய தொழில்களையும் சிங்காய் மாநிலம் மேலும் வளர்ச்சியுறச் செய்யும் என்றார் அவர். சிங்காய் மாநிலம் அதன் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, வணிகரை ஈர்த்து முதலீட்டை உட்புகுத்துவதற்கும் பொருளாதாரத்தின் பெரும் வளர்ச்சியை நனவாக்குவதற்கும் சிறந்த சூழ்நிலையையும் நிலைமையையும் சிங்காய் மாநிலம் உருவாக்க வேண்டும்." என்று அவர் வலியுறுத்தினார்.

Geermu

"அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை இறுகப்பற்றி, சிங்காய் மாநிலத்தின் தலைநகரான சினினை மையமாகக் கொண்ட முழு மாநிலத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை வலைப்பின்னலை நிறுவ வேண்டும். சிங்காய்-திபெத் இருப்புப் பாதையின் 2வது கட்டத் திட்டப்பணியில் இடம்பெறும் Geermuஇலிருந்து திபெத்தின் லாசாவுக்குச் செல்லும் இருப்புப் பாதையைக் கட்டிமுடிக்க வேண்டும்; சினின் விமான நிலையத்தையும் சிங்காய் மாநிலத்தின் 2வது பெரிய நகரான Geermu விமான நிலையத்தையும் திருத்தியமைத்து விரிவாக்கி, விமான போக்குவரத்துச் சேவையை பெரிதும் வளர்ச்சியுறச்செய்யப் பாடுபட வேண்டும்; அன்றி, தகவல் இணையத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, செய்தித்தொடர்பு இணையத் தொழில் நுட்ப நிலையை உயர்த்தி, செய்தித்தொடர்புத் திறனை வலுப்படுத்த வேண்டும்." என்றார் அவர்.

எதிர்காலத்தில் சிங்காய் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியிலும் அதே வேளையில், அதன் இயற்கை காட்சி மேலும் மக்களைக் கவரும் முறையில் அழகாகக் காணப்படும் என நம்பலாம்.