• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Friday    may 16th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-28 10:01:43    
12வது மனைவியாக 18 வயது அழகியை திருமணம் செய்த மன்னர்

cri

ஆப்பிரிக்காவில் உள்ள கவாசிலாந்து நாட்டு மன்னர் எம்சுவாதி, 18 வயது அழகி நோதண்டோ டுபேயை 12வது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

ராணிமாதாவை கவுரவிப்பதற்காக அரிரக்கணக்கான கன்னிப்பெண்கள் மேலாடை அணியாமல் நடனம் ஆடும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடந்த போது அதில் நடனம் ஆடிய டுபேயைதன் 12வது மனைவியாக மன்னர் தேர்ந்து எடுத்தார்.

கடந்த ஆண்டு மே மாதம்தான் மன்னரின் 11வது திருமணம் நடந்ததது. 20 வயது நொளிச்வா என்டெனசாவை அவர் மணந்து கொண்டார்.

37 வயதான மன்னர் எம்சுவாதிக்கு பெண்களுக்கு அடுத்தபடியாக கார்கள் மீது மோகன் அதிகம். இவரது தந்தைக்கு 45 மனைவிகள் இருந்தனர்.

சுவாசிலாந்து மக்கள் வறுமையாலும் எய்டஸ் நோயாலும் பாதிக்கப்பட்டு போராடிக் கொடிருக்கும் போது மன்னர் எம்சுவாதிக்கு ஆண்டுக்கு ஒரு திருமணம் செய்து கொண்டு உல்லாசத்தில் மிதக்கின்றார்.

மாணவர்களுக்கு செக்ஸ் வரி

ருமேனியா நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் தங்கள் காதலியுடன் ஒரு இரவு தங்க வேண்டுமானால் செக்ஸ் வரியாக முன்னூறு ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

இது அவர்கள் வீடு இல்லை எனவே ஒரு மாணவனோ அல்லது மாணவியோ, இரவு நேரத்தை தங்காள் மனம் கவர்ந்தவருடன் செலவிட வேண்டுமானால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் அதிகம் இல்லை என்று விடுதி நிர்வாகி ஒருவர் கூறினார்.

நூற்றுக்கணக்கான ஆண்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி உள்ளனர் என்றும் அந்த நிர்வாகி கூறினார்.

செக்ஸ் வரி முலம் இருபத்தொரு லட்சம் ரூபாய் திரட்டவும் அதன் மூலம் விடுதியைப் பழுதுபார்க்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

உலகின் முதல் சிரிப்புப்பள்ளி

ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உலகின் முதல் சிரிப்புப்பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. சிரிக்கக் கற்றுத்தருவதற்காகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளிக் கூடம் இது தான்.

ஆசிரியர் சுசானே மேயர் பல்வேறு வகையான சிரிப்புகளைக் கர்றுத்தர இருக்கின்றார்.

உலகம் முழுவதும் சிரிப்புப் பள்ளி தொடங்கப்படும் என்று நம்புவதாக சுசானே கூறினார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040