பார்வையாளர் என்பது அரசு சாரா அரசியல் பொருளாதார குழு அல்லது சர்வதேச, அரசு சாரா நிறுவனங்கள் சர்வதேச அமைப்பில் கலந்து கொள்ளும் ஒரு தகுதியாகும்.
அரசு சாரா அரசியல் பொருளாதார சமூக மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள், அரசுகளுக்கிடையிலான நிறுவனங்கள் பார்வையாளர் என்ற முறையில் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்வதை பெரும்பான்மையான சர்வதேச நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. இத்தகைய அரசு சாரா அமைப்புக்கள் தத்தமது அரசுகளின் கருத்துக்களை அல்லது தங்களை அனுப்பும் நிறுவனங்கள், அல்லது தனியாரின்
கருத்துக்களை ஒரு தகவலாக மாநாட்டிற்கு வழங்குகின்றன. பொதுவாக கூட்டம் நடைபெறும் போது, தற்காலிகமாக அவர்கள் பார்வையாளர் முறையில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். சில சர்வதேச நிறுவனங்கள் நிரந்தர பார்வையாளர் பிரதிநிதிக் குழுவை ஏற்றுக் கொள்கின்றன.
பொதுவாக சர்வதேச நிறுவனங்களின் கூட்டங்களில் பார்வையாளருக்கு பேசும் உரிமையும் வாக்களிப்பு உரிமையும் கிடையாது. முக்கியமான விவாதங்களில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனால் கூட்டத்தில் எல்லோருக்கும் தரப்படும் தகவல்கள் பார்வையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன. அத்துடன் சில வேளைகளில் அதிகாரப்பூர்வ சோதனைகளையும் அவர்கள் முன்வைக்கலாம். பார்வையாளர்களுக்கு சில சலுகைகளும் வசதிகளும் தரப்படுகின்றன. அதேவேளையில் சிறியளவில் கடமையும் உண்டு. உறுப்பு நாடுகளுக்கு உள்ள சட்டரீதியான தகுநிலை பார்வையாளர் நாட்டுக்கு கிடைப்பதில்லை. சர்வதேச நிறுவனத்தின் பார்வையாளராக ஆகும் போது அந்த நாடு அந்த சர்வதேச அமைப்பில் உறுப்பு நாடாவதை நோக்கி ஓரடி எடுத்து வைத்துள்ளது என்று லொல்லலாம்.
பார்வையாளர் என்ற தகுதியில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று பார்வையாளர் தாம் கலந்து கொள்ளும் சர்வதேச நிறுவனத்தை பார்வையிடும். அதில் சேரலாமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். மறுபுறம், சர்வதேச அமைப்பு அதன் பார்வையாளர் தன்மையைக் கண்கானித்து அதை அமைப்பின் உறுப்பினராக அங்கீகரிக்கலாமா என்பது பற்றி தீர்மானிக்கும்.
செய்தி ஏடுகளில் இரு நாட்டு அரசுகளுக்கிடையில் குறிப்பாணை உருவாக்கப்படுவதாக செய்திகளில் அடிக்கடி படித்தேன். குறிப்பாணை என்றால் என்ன?இது பற்றி விளக்கம் கூறலாமா? என்று சில நேயர்கள் கடிதம் மூலம் கேள்கின்றார்கள்.
குறிப்பாணை என்பது தூதாண்மை நடைமுறையில் நாடுகளுக்கிடையில் அல்லது தூதாண்மை பிரதிநிதிக் குழுக்களுக்கிடையில் பயன்படுத்தும் பத்திரமாகும். உண்மையில் ஒரு வகையான வாய் மொழி சுற்றறிக்கையின் அல்லது பேச்சுவார்த்தையின் பதிவு என்று இதைல் சொல்லலாம். குறிப்பிட்ட பிரச்சினையை சட்ட முறைப்படி விபரமாக எடுத்து கூறுவதாகும். மேலும் தெளிவாக கூறினால் பேச்சுவார்த்தையின் அம்சங்கள் விளக்கம், சொந்த கருத்தை வயியுறுத்துவது, மற்ற தரப்பின் கருத்தை நிராகரிப்பது என்பனவற்றைப் பதிவு செய்யும் ஆவணமாகும். பேச்சுவார்த்தை நடத்தும் போது பரஸ்பரம் உரையாடல் அம்சங்களை தெளிவுப்படுத்தும் வகையில் அந்த அம்சங்களை முன்கூட்டியே தயாரித்து பேச்சுவார்த்தைக்கு பின் எதிர்த் தரப்பிடம் ஒரு குறிப்பு ஆவணமாக ஒப்படைக்கலாம்.
குறிப்பாணை மூன்றவது தரப்பின் பெயரிலும் உருவாகலாம். தலைப்பு, கையொப்பமிட்டல் இலக்கம் ஆகியவை இடம் பெறத் தேவையில்லை. ஆனால் விநியோகிக்கும் தேதி, இடம், இருக்க வேண்டும். பணி ஆவணம் குறிப்பாணையில் சேர்க்கப்பட லாம்.
|