• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-30 17:21:51    
காய்கறி PIE

cri
கலைமகள்—அண்மையில் பல நேயர்களின் கடிதங்கள் கிடைத்தன. சீனாவின் சைவ உணவு பற்றி தெரிய விரும்புவதாக தெரிவித்தனர். இதனால், இன்று காய்கறி PIE எனும் சைவ உணவு அறிமுகப்படுத்துகின்றேன்.

ராஜாராம்—அப்படியா!இதற்கு என்னென்ன காய்கறிகள் தேவை?

கலைமகள்—பல வகை காய்கறிகளை இதில் சேர்க்கலாம். வெங்காயம், கேரட், வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை எடுத்துவையுங்கள். தவிர, கோதுமை மாவு 150 கிராம், வெண்ணெய், 100 கிராம், குளிர் நீர் அரை கோப்பை, சர்க்கரை 25 கிராம், உப்பு 5 கிராம் எடுத்துவையுங்கள்.

ராஜாராம்—சரி, இந்தப் பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கின்றன. இனி, சமையல் முறை சொல்லாமா?

கலைமகள்—ஆமாம். முதலில், வெண்ணெயை சிறிய துண்டுகளாக வெட்டுங்கள். கோதுமை மாவு, குளிர் நீர், சர்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக பிசைந்து, பெரிய உருண்டைகளாக பிடிந்து, குளிர்பதனப்பெட்டியில் 20 நிமிடம் வைக்க வேண்டும்.

ராஜாராம்—இனி, இதை வடை போல தட்ட வேண்டும் அல்லவா?

கலைமகள்—ஆமாம். அது அப்புறம், முதலில், வடைக்கு உள்ளே வைக்கும் காய்கறிகளைத் தயாரிப்போம். வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை, சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக அரியுங்கள். பிறகு, வாணலியில் எண்ணெய் விடுங்கள், ஒரு நிமிடம் சுடட்டும். எண்ணெய் கொஞ்சமாக ஊற்றினால் போதும், இந்தக் காய்கறிகள் அனைத்தையும் எண்ணெயில் போட்டு, இதில் கொஞ்சம் உப்பு, மிளகு, சோயா சாஸ் ஆகிவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

ராஜாராம்—இனி, வடை போல தட்டலாமா, கலைமகள்?

கலைமகள்—சரி, குளிர்ப்பதனப்பெட்டியிலிருந்து கோதுமை மாவு உருண்டைகளை வெளியே எடுத்து, இரண்டு பகுதிகளாக பிரித்து, கையால் வடை போல தனித்தனியாக தட்ட வேண்டும். இப்போது, ஒரு முட்டையின் மஞ்சள் கருவை எடுங்கள்.

அப்புறம், ஒரு வடையை தட்டில் வையுங்கள். இதற்கு மேல், சில கலந்த காய்கறிகளை வைத்து, காய்கறியைச் சுற்றி, முட்டையின் மஞ்சள் கருத் திரவத்தை கொஞ்சமாக தடவுங்கள். பிறகு, இன்னொரு வடையை மேலே வைத்து, அதைச் சுற்றிலும் நன்றாக மடிக்க வேண்டும். கடைசியாக மீண்டும் முட்டையின் மஞ்சள் கருத் திரவத்தை கொஞ்சமாக தடவுங்கள். இதன் நோக்கம் காய்கறிகள் வெளியே வந்து விடக்கூடாது.

ராஜாராம்—அப்படித்தானே?இதுவே, சிறப்பாக சைவ உணவாகும்.

கலைமகள்—ஆமாம். இனி, இந்தத் தட்டு நிலக்கரி-கரிப்பாத்திரத்தில் வைத்து, 200 டிகிரியில் 25 நிமிடமாக வேக வேண்டும்.

ராஜாராம்—விரைவில் நன்றாக சுவையான வாசனை கலந்து காற்றுடன் வருகிறது.

கலைமகள்—இந்த திண்பண்டத்தில் காய்கறிகள் அதிகம். சுவையாக இருக்கிறது. விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் போது, இந்த சுவையான சீன சைவ உணவைத் தயாரிக்க முடியும்.

ராஜாராம்—ஆமாம். நல்ல கருத்து. சரி, கலைமகள், சீனாவில் சைவ உணவின் வகைகள் அதிகமாக இருக்கின்றன, அல்லவா?

கலைமகள்—ஆமாம். சீனாவில் காய்கறிகள் மட்டுமல்ல, பழங்களையும் மலர்களையும் பயன்படுத்தி பல் வகை சுவையான சைவ உணவு தயாரிக்க முடியும்.