• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-30 17:45:42    
மன்கேஹுவேவின் செதுக்கு சிற்பக் கூடம்

cri

நகைகளின் வடிவமைப்பில் மன்கேஹுவே தனிக்கவனம் செலுத்தினார். நகை, உடலில் அணியும் நடமாடும் சிலையாக திகழ்கிறது. சிலையைப் போல, நகைகளில் ஆழமான கலை அம்சம் உள்ளது. இது மட்டுமல்ல, வெவ்வேறு வடிவமான நகைகள், வேறுப்பட்ட மனிதர்களின் தனிச்சிறப்புக்களை வெளிப்படுத்துகின்றன. அவருடைய கடையில், வேறுபட்ட ஒவ்வொரு நகைகளும், நுட்பமான உணர்வுடன் வடிவங்களில் கையால் சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன. இந்த நகைகளின் வடிவமைப்பு, மூலப்பொருட்களின் மதிப்பை மிகவும் மிஞ்சி விட்டது என்று, மன்கேஹுவே கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

நான் மனத்தில் தோன்றும் கருத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கின்றேன். இது வெறும் ஒரு உற்பத்தி பொருள் மட்டுமல்ல. எனது படைப்புகள் கலை உணர்வு மிக்கவை என நம்புகின்றேன் என்றார் அவர்.

மன்கேஹுவேவின் வடிவமைப்பு, ஓட்டத்தை பின்பற்றாமல் இருந்த போதிலும், அதை கைவிடவும் மாட்டது. அவர் அடிக்கடி ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்திலுள்ள நகைத் தயாரிப்பில் வளர்ச்சியடைந்த சில நாடுகளுக்குச் சென்று, புதிய வடிவமைப்புக்களையும், பிரபல சர்வதேச நகை காட்சியையும் பார்வையிட்டார். நகை வடிவமைப்பாளர் என்ற முறையில் தமது தனித்தன்மை முக்கியமானது என்கிறார். நகை வடிவமைப்பில் மன்கேஹுவே ஒரு திறமை மிக்கவர். ஆனால், அவர் நகை வடிவமைப்பை தனியாக கற்றுக்கொள்ள வில்லை. 1986ம் ஆண்டில், அவர், சியாங்சி மாநிலத்து சியிங்தேசன் மாவட்டத்தின் பீங்கான் கல்லூரியின் சிற்பப் பிரிவில் பட்டம் பெற்றார். ஆசிரியர், வடிவமைப்பு தொழில் நிறுவனத்தின் பணியாளர், ஹோட்டலின் கலை கண்காணிப்பாளர் ஆகிய பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். பிறகு, அவர் பெய்ஜிங் வந்து, மத்திய நுண் கலைக் கல்லூரியில் சேர்ந்து, சிற்பச் செதுக்குக் கலையைப் பயின்றார். 1996ம் ஆண்டில், அவர் பெய்ஜிங்கில் ஒரு செதுக்கு சிற்பக் கூடத்தைத் திறந்தார். செதுக்கு ஓவியத்தை விரும்புகிறர்களுக்கு, ஓவியத்தைத் தீட்டும் இடத்தை வழங்கினார். செதுக்கு ஓவியக் கண்காட்சியும் சிற்ப கண்காட்சியும் இங்கு நடைபெறுகின்றன. இந்த ஓவிய கூடத்தைத் திறந்த போது, நகை வடிவமைப்பில் ஈடுபடத் துவங்கினார். அப்பொழுது, தாம் தயாரிக்கும் மனித உருவச் சிற்பங்கள் மேலும் அழகாக மாறும் பொருட்டு, சில எளிதான நகைகளைத் தயாரித்து இணைத்தார். ஆனால், இந்த வேலையை விரும்பிச் செய்து, இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு புதிய வகை நகையை வடிவமைத்துத் தயாரிக்க முடிகிறது என்று மன்கேஹுவே எமது செய்தியாளரிடம் கூறினார். பிறகு, உட்செதுக்கு ஓவிய கூடத்தை இயக்குவதுடன், யீன் சு எனும் நகை கடையைத் திறந்து, நகை வடிவமைப்பில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார்.

மன்கேஹுவேவின் நகைக் கடையில், மேலும் அதிக அளவு வணிகம் நடக்கிறது. பொது மக்கள் அவருடைய கடையில் நகையை வாங்க விரும்புவதோடு, பல புகழ்பெற்ற நடிகர்களும் தங்களது தனித்தன்மைக்குப் பொருத்தமான நகைகளை வாங்குகின்றனர். நகையை வடிவமைப்பதில் வாடிகையாளர்களுடனான தொடர்பு மிகவும் முக்கியமானது என்று அவர் கருதுகின்றார்.