முக்கிய அரசுத் துறை தொழில் நிறுவனங்கள்
cri
இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில், சீனாவில் முக்கிய அரசுத் துறை தொழில் நிறுவனங்களின் உற்பத்தியும் வினியோகமும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வினியோக விகிதம் 96.3 விழுக்காடு என்று புள்ளி விவரம் கூறுகிறது. நிலக்கரி, நெசவு, உலோகவியல், மின்னணு, வேதியியல் தொழிற்துறை உட்பட தொழில்களின் உற்பத்தி மற்றும் வினியோக விகிதம் 98 விழுக்காட்டுக்கு மேலாக இருந்தது. கடந்த எட்டு திங்களில், இந்நிறுவனங்களின் லாபம் 49 ஆயிரம் கோடி யுவானை நெருங்கியது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.4 விழுக்காடு அதிகமாகும்.
|
|