இவ்வாண்டு மத்திய தொழில் நிறுவனங்களின் லாபம் 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டக்கூடும் என்று சீன அரசவையின் தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டித் தலைவர் Li Yong Yong அண்மையில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, மத்திய தொழில் நிறுவனங்கள் பெற்ற லாபம், 47840 கோடி யுவானைத் தாண்டியது. இவ்வாண்டின் முற்பாதியில், இந்த தொழில் நிறுவனங்கள் விரைவான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளன. தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் நேரடி கண்காணிப்பின் கீழ் 160க்கு அதிகமான மத்திய அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
|