• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 09:34:34    
உலக பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டி

cri

செப்டம்பர் 30ஆம் நாள் முதல் அக்டோபர் 2ஆம் நாள் வரை 2005-2006 உலக கோப்பைக்கான குறுகிய தூர பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது.

சீன விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தென் கொரிய வீரர்களைவிட மிகவும் சிறப்பாக சறுக்கினர். மொத்தம் 8 தங்கப் பதக்கங்களிலான 5 ஐ தட்டிச்சென்றனர். 2002ஆம் ஆண்டுக்குப் பின், நடைபெற்ற உலகளாவிய போட்டிகளில் சீன அணி தென் கொரிய அணியைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

சீன இளம் வீராங்கனை வாங் மொங் இப்போட்டியில் மிகவும் சிறப்பாக சறுக்கியதால் 500 மீட்டர், 1000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார். அவர் பன்முக வல்லமை போட்டி நிகழ்ச்சியிலும் முதலிடம் வகிக்கின்றார். அதேவேளையில் அவர் சகநாட்டவர்களுடன் இணைந்து மகளிருக்கான 3000 மீட்டர் தொடர் சறுக்கல் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

சீன வீரர் லீ ச்சியா ச்சுன் ஆடவருக்கான 500 மீட்டர் சறுக்கல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 1000 மீட்டர் சறுக்கில் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் அணி தோழர்களுடன் இணைந்து ஆடவருக்கான 5000 மீட்டர் தொடர் சறுக்கல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். சீனாவின் மற்றொரு வீரர் லீ யே ஆடவருக்கான 1500 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.

இந்த போட்டியில் சீன வீரர்களும் வீராங்கனைகளும் தமது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினர். அவர்கள் உடல் ஆற்றல் மிக்கதாக இருப்பதோடு மிகவும் இசைவாக ஒத்துழைத்தனர். செப்டம்பர் 29ஆம் நாள் அன்றைய போட்டியில் வாங் மொங், செங் சியோ லே, பழைய வீராங்கனை யாங் யாங் ஆகிய மூவரும் இறுதிப்போட்டியில் நுழைந்தனர்.

அவர்களுடன் போட்டியிட்டவர்கள் தென் கொரியாவின் மூன்று வீராங்கனைகளாவர். சீன வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக ஒத்துழைத்ததால் 500, 1000, மற்றும் 1500 மீட்டர் போட்டிகளிலும் சீன வீராங்கனை வாங் மொங் தென் கொரிய வீராங்கனைகளைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

சீனாவின் இதர வீராங்கனைகளின் ஒத்துழைப்பில்லாவிட்டால், வாங் மொங் இந்த சாதனையை பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான 3000 மீட்டர் தொடர் சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனைகள் சிறந்த முறையில் ஒத்துழைத்ததினால், 4 நிமிடம்14.931 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

அக்டோபர் முதல் நாள் சீனாவின் பழைய வீரர் லீ ஜியா ஜுன் மிகவும் முழுமூச்சுடன் போட்டியிட்டதால் சீனாவுக்கு இன்னொரு தங்கப் பதக்கத்தை அதிகரித்தது பாராட்டத்தக்கது.