• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-11 18:12:29    
துருவ அறிவியல் ஆய்வு

cri
மக்களின் பார்வையில் தென் துருவம், வட துருவம் ஆகிய இடங்கள் தனிமைமிக்க அற்புதமான உலகம் போல் காணப்படுகின்றன. மக்களின் வாழ்க்கைச் சந்தடிகளில் இருந்து விலகி மும்முரமான உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு வெகு தொலைவில் ஒதுங்கி இருக்கின்றன. அங்கு பெருமளவில் அறிவியல் ஆய்வு நடத்தத் தேவையில்லை என்று பலரும் கருதுகின்றனர்.

பூகோளம் என்னும் ஒரு அமைப்பை தென் துருவமும் வட துருவமும் இணைக்கின்றன. அவற்றின் மாற்றமும் வளர்ச்சியும் மற்ற இடங்களுடன் நெருக்கமாக தொடர்புடையவை. ஆகவே பல ஆண்டுகளாக துருவ ஆய்வு பல நாடுகளின் ஆய்வாளர்கள், அறிவியலர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனா கடந்த 80ம் ஆண்டுகளில் துருவ தளத்தில் தனது ஆய்வுப் பணிகளைத் துவக்கியது. தென் துருவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக தென் துருவத்தில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளையில் வட துருவத்தையும் சீனா துருவ ஆய்வின் புதிய முனையாக கருதுகின்றது.

வட துருவ அறிவியல் ஆய்வின் முக்கியத்துவம் பற்றி சீன அரசு கடல்வள ஆணையத்தின் துருவ ஆய்வு பணியகத்தின் தலைவர் சியூ தைய் யூ கூறுவதைக் கேட்கலாமா?

1  2  3  4